அண்ணா ஹசாரே-கடிதங்கள்

. இதை காங்கிரஸ் ஒரு வாய்ப்பாக உருவாக்கி இருக்கிறதா? அல்லது வாய்ப்பாக
பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறதா? (ராகுலைக் கொண்டு வருவதற்கு)

எனது பதில்: இதை காங்கிரஸ் உருவாக்கிய இயக்கம் கிடையாது. ஏனெனில் இது இரு
முனையும் கூரான கத்தி இதை வைத்து காங்கிரஸ் பயன் அடைவதை விட பாதகமாக
முடிவதற்கான வாய்ப்பு மிக அதிகம். தன் தலையில் மண்ணை வாரிப்போடும்
வாய்ப்பை எவரும் வலிந்து உருவாக்க மாட்டார்கள். இதை விட எளிதாக ராகுலை
உள்ளே கொண்டுவருவதற்கு இதை விட எளிமையான ஆயிரம் வழிகள் இருக்கிறது.
மேலும் இப்போது கூட அவரை எந்த காரணமும் இல்லாமல் மிக எளிமையாகவே கொண்டு
வந்துவிடலாம். இது எல்லாருக்கும் (பிஜேபி உட்பட தெரிந்ததுதான்). இதை
காங்கிரஸ் ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக்கொள்ள பார்க்குமா என்றால்
கண்டிப்பாக பார்க்கும். இதையே வேறு ஒரு பிரதமரையும் (பிஜேபியிலிருந்து)
மோடிக்கு ராகுலின் இடத்தில் இருந்தால் அதை பிஜேபியும் பயன்படுத்தவே
பார்க்கும். இது அரசியலின் பால பாடம் (இதை மேலாண்மையில் Risk may become
an oppurtunity என்று சொல்வதுண்டு). இதைத்தவிர மற்றவரும் இதை ஒரு
வாய்ப்பாகவே பயன்படுத்தி அவர்களை நிலைப்படுத்திக்கொள்ள முயல்வார்கள்
(நம்மைப்போன்ற தனி மனிதர்களும் கூட — நான் இந்த திரியை
பயன்படுத்திக்கொண்டது போலவே :-) )

2 . பின்பு ஏன் அவர் காங்கிரேசை பேசக்கூப்பிடுகிறார் அதுவும்
சோனியாவையும் ராகுலையும்?

எனது பதில்: காந்தி ஹிட்லரிடம் பேசினார் என்பதை நினைவு கூறுங்கள். அன்னவோ
காந்தியோ பேசுவது மனிதர்களிடம் அல்ல அவர்களுடைய மனசாட்சியிடம். அதுவும்
அண்ணாவோ காந்தியோ இங்கு பேசவே இல்லை அவர்கள் மூலமாக “அறம்” பேசுகிறது.
அந்த அறத்திற்காக மக்களை ஒன்றாகச் சேர்த்தது காந்தியும் அன்னாவும்
அவர்களது பங்கு அவ்வளவே. அது மட்டுமே மனிதர்களால் முடியும் அதற்கு மேல்
அறம் பேசிக்கொள்ளும்.

3 . அவரை மதித்தாலும் அவருடன் இருப்பவர்கள் நம்பிக்கையானவர்களாக இல்லை.

எனது பதில்: மிக எளிது நன்றாக பார்த்தால் காங்கிரஸ் / திராவிட / இடதுசாரி
சார்பாளர்கள் இந்துத்துவா சார்புடையவர்கள் அருகில் இருக்கிறார்கள்
என்றும், அதேபோல் இந்துத்துவா சார்புடையவர்கள் காங்கிரஸ் / இடதுசாரிகள்
அருகில் இருக்கிறார்கள் அவர்கள் கடத்திவிடுவார்களோ என்ற அச்சமும்
அதிகமும் பயப்படுகிறார்கள். இது மற்றவரின் மேல் உள்ள
அவநம்பிக்கையிலிருந்து பேசுவதே முதல் காரணம். மேலும் ஒரு கூட்டத்தை கூட்ட
அறத்தையே நாட வேண்டி இருக்கிறது எனும் பொது வன்முறை இல்லாத ஒரு
கூட்டத்தில் மிக எளிதாக அறம் மற்ற முன்னணி வீரர்களை அதனுடைய கூட்டத்தின்
பலத்தினால் மட்டுமே தூக்கி எறிந்துவிடும். ஒரு பேச்சுக்கு அன்னாவே சிறிது
காலத்திற்கு பிறகு வழி மாறினால் அவரையும் தூக்கி எறிந்து விடும். அதுவே
சமுக (இங்கு கூட்ட அறத்தின்) பலம். வன்முறை சார்ந்த இயக்கமாக இருந்தால்
அந்த கூட்டம் சேர்வதற்குள்ளாகவே மற்றவரின் மேலுள்ள அவநம்பிக்கையினால்
கூட்டம் சிறுத்து விடும் (கொன்றொழித்தல்). மேலும் ஒரு சில
சந்தர்பங்களினால் வன்முறையாளர்கள் கைப்பற்றினாலும் அதுவும் மிக சில
வருடங்கள் மட்டுமே நிலைக்க முடியும். (இதுவே ரஷ்யாவில் நிகழ்ந்தது)


4 . மக்கள் ஆதரவு எப்படி?

எனது பதில்: மூன்று வகையான மக்கள் இந்த சந்தர்பத்தில் பிரிக்கலாம்.
அ. ஞானிகள் – முழுமை அடைந்தவர்கள் (எனக்கு தெரிந்தவரை இது logical
மட்டுமே)
ஆ. பொது மக்கள் – இவர்களுக்கு இதனால் ஏதாவது நல்லது நடுக்குமா, நமது
அன்றாட பிழைப்பை பெரிதாக பாதிக்காமல் இதற்காக கொஞ்சம் செலவு செய்ய
முடியுமா இதற்கு பதில் ஆம் என்றால் போராட்டத்தில் கலந்துகொள்
அவ்வளவுதான். — இவர்களே இங்கு முக்கியமானவர்கள் ஏன் அன்னாவையும் விட
அதிகமாக.
இ. சிந்திக்கும் பொதுமக்கள்: (இவர்கள் மேலும் இரண்டு வகை – ஒரு மனிதரே
இரண்டிலும் வேறு வேறு விழுக்காட்டில் இருக்கலாம்)
i . நம்பிக்கையாளர்கள் – எதனையும் முழுதும் நம்புபவர்கள் —
நான் இதில் இருக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்
ii . அவநம்பிக்கையாளர்கள் – எதனையும் நம்பாமல் சந்தேகக்
கண்ணோட்டத்திலேயே பார்ப்பவர்கள் – நமது குழுமத்தில் இது மிகக் குறைவே.
ஆனால் ஒவ்வொருவருக்கும் சந்தற்பங்களுக்கேற்ற மாறுபடும். ஒரு மனிதரை
நம்பிக்கை / அவநம்பிக்கையாளர் என்று பிரிக்கவே முடியாது.
சந்தற்பங்களுக்கேற்ப விழுக்காடு மாறும் அவ்வளவுதான்.

சார்பு நிலையிலிருந்து பார்க்கும் போது அது சரியானதாகவும் (நம்பிக்கை
வைப்பதாகவும்) எதிர்-சார்பு நிலையிலிருந்து பார்க்கும் போது தவறாக
தோன்றுவது இயல்பே. வருந்தத்தக்கதாக இது தமிழர்களுக்கு அதிகமும்
அவநம்பிக்கை சார்ந்ததாக இருக்கிறது என்பது எனது கணிப்பு (நமது
குழுமத்தைத் தவிர).

இங்கே ஒரு எளிய கேள்வி நம்மில் எத்தனை பேர் தெரிந்தோ தெரியாமலோ லஞ்சம்
கொடுக்காமலும், உழல் செய்யாமலும் அல்லது அதற்கு துணை புரியாமலும்
இருக்கிறோம். என்னால் எளிதில் சொல்ல முடியும் எவருமே இல்லை என்பதை.
அப்படியானால் நாம் அண்ணாவிற்கு துணை நிற்க தகுதி இழக்கிறோமா? எவர்
தகுதியாக இருப்பார்கள். ஏன் இதில் அன்னாவே ஏதாவது ஒரு காரணத்திற்காக
தகுதி இழக்க வாய்ப்பு இருக்கிறது. தேடிக்கண்டுபிடித்து இரண்டு லட்சம்
சொல்கிறார்கள் இப்போது. இனி அவர் வாழ்க்கையில் பிறந்த நாளே கொண்டடப்போவது
இல்லை என்பது உறுதி. அதுவும் அவருக்கு இவ்வளவு ஆகும் என்று
தெரிந்திருந்தால் இதை அனுமதித்திருப்பாரா என்பது சந்தேகமே
(என்னைப்பொறுத்தவரை மாட்டார் என்பது எனது நம்பிக்கை).

5 . அன்னாவிடம் எவரும் நெருங்க முடிவதில்லை – சுற்றி இருப்பவர்கள் ஒரு
இரும்புத்திரை போட்டு வைத்துள்ளனர்.

எனது பதில்: இது தற்போது மிகவும் அவசியமான தேவையே. இல்லையென்றால் மிக
எளிதாக எவராவது அன்னாவின் ஒரு அடி அடித்தால் மொத்த கூட்டமே வன்முறைக்கு
மாறிவிடும். அதன் பின் அன்னாவையும் மொத்தக்கூட்டத்தையும் அரசு தனது கால்
சுண்டு விரலால் நசுக்கிவிடும். ராம்தேவ ஒரு படை அமைப்பதாக சொன்னவுடனேயே
அரசின் தொனி மாறியதை கவனிக்கவும். இதன் பின் ராம்தேவால் ஒன்றுமே செய்ய
முடியாது. அவ்வளவுதான்.

6 . இதை அன்னா எப்படி தவிர்ப்பார்?

மிக எளிது அன்னா ஒரு குழந்தை கிடையாது.
அவர் ராம்தேவுக்கு கொடுத்த ஆதரவை எவ்வளவு எளிதாக விலக்கிக்கொண்டார்
என்பதை பாருங்கள் அதையே மற்றவரிடமும் எளிதாகவே செய்யமுடியும்.

இதை தவிர்த்து இந்த ஒரு சட்டம் எப்படி நம்மை பாதிக்கும் என்பதை கொஞ்சம்
சிந்திப்போம்.

சட்டம் இயற்றியவுடன் அதன் கண்காணிக்க ஒரு அமைப்பும் கூடவே உருவாகும்,
அதன் பின் யாராக இருந்தாலும் அந்த அமைப்புக்கு பதில் சொல்லவேண்டிய
கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு அமைப்பின் மேல் உள்ள கண்ணிகள் ஒருவருக்கு
ஒருவர் (தனி மனிதர்கள் அல்ல அமைப்பு) பதில் சொல்ல வேண்டிய கட்டயாம்
ஏற்படுகிறது இப்போது உள்ள மூன்று தூண்களுடன் நான்காவது தூணாக இது
கட்டப்படுகிறது. அதனால் இப்போது உள்ள “அரசியல் அமைப்பு சட்டம் vs உச்ச
நீதிமன்றம்” என்ற ஈரடுக்கு முறை மாறி “அரசியல் அமைப்பு சட்டம் vs உச்ச
நீதிமன்றம்” vs “அரசியல் அமைப்பு சட்டம் vs லோக்பால்” vs “அரசியல்
அமைப்பு சட்டம் vs உச்ச நீதிமன்றம்” என்ற முறை வருகிறது.

இது அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் லோக்பால் எவரும் தவறு செய்யாமல்
ஒன்றை ஒன்று கவனித்துக்கொள்ளும். இதை உடைக்க முடியாதா முடியும் ஆனால்
இதன் bonding கடினமானது எளிதில் உடைக்க முடியாதது.

திவாகர் நாகராஜன்


அண்ணா ஹசாரே கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கம்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே-கடிதங்கள்