காதலும் யதார்த்தவாதமும்

”தங்க நிலவில் கெண்டையிரண்டு துள்ளித் திரிவதுண்டோ?” என்பதுபோல உளறுவதற்கெல்லாம் காதல் கண்டிப்பாகத் தேவை. ஆனால் பெண் சமநிலையுடன் தான் இருக்கிறாள். யதார்த்தமாகத்தான் பதில் சொல்கிறாள்.

சரி பெண்ணே அப்படி உளறினால்? அப்படியும் ஒரு பாட்டு இருக்கிறது. பழைய விஜய் படம்.

மழை சுடுகின்றதே
அடி அது காதலா தீ குளிா்கின்றதே
அடி இது காதலா ?

இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா?

என்று காதலி தன் ஐயங்களைக் கேட்க காதலன் திடுக்கிட்டு ஆஆஆ என்று ஒர் அலறல் போடுவான் பாருங்கள், எனக்கு ரொம்பப்பிடித்த யதார்த்தவாதம் தமிழ் சினிமாவில் வந்தது அங்கேதான். அவன் என்ன செய்வான் பாவம்!

(சொல்லாமலே யார் பார்த்தது?)

முந்தைய கட்டுரையோகமும் குடும்பமும் -கடிதம்
அடுத்த கட்டுரைகுருநித்யா ஆய்வரங்கு – ஒரு பதில்கடிதம்: கடலூர் சீனு