ஆழ்ந்திருந்து அறிதல்

குரு நித்ய சைதன்ய யதி

அன்புள்ள ஜெ

தியான வகுப்புகள் மற்றும் யோக வகுப்புகள் பற்றிய காணொளியை பார்த்தேன். என்னுடைய குடும்பத்தில் இருந்தே சிலர் எனக்கு அனுப்பியிருந்தார்கள். இந்த பயிற்சிகளைப் பற்றி தெரியும். ஆனால் இன்று எல்லா இடங்களிலும் நிகழும் தியானம் யோகம் பயிற்சிகளிலிருந்து இவை எப்படி வேறுபடுகின்றன?

அர்விந்த்ராஜ்

சௌந்தர்

அன்புள்ள அர்விந்த்,

தியானம், யோகம் ஆகியவை இன்று இந்தியாவை விட உலக அளவில்தான் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் மூன்று வழிமுறைகள்தான்  மிகப்பிரபலம்.

  • தியானத்தை எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகம் செய்யும் ஆழ்நிலை தியானம். இதை மகரிஷி மகேஷ் யோகி உலகமெங்கும் கொண்டுசென்றார். அதன் மேம்படுத்தப்பட்ட பல முறைகள் இன்று புகழ்பெற்றுள்ளன
  • யோகப்பயிற்சிகளை திருமலை கிருஷ்ணமாச்சாரி, பி.கே.எஸ். அய்யங்கார் மற்றும் டி.கே.வி.தேசிகாச்சாரியார் போன்றவர்கள் உலகமெங்கும் கொண்டுசென்றனர். இன்று அது ஒரு சர்வதேச அளவிலான பயிற்சிமுறையாக நிலைகொண்டுவிட்டது
  • திபெத், ஜப்பானிய பௌத்த அறிஞர்களால் விபாசனா முறை உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டது. அவை இரண்டும் இணைந்து புதிய முறைகள் உருவாகியுள்ளன.

இன்று உலகில் இப்பயிற்சிகள் இல்லாத நாடுகள் மிகமிகக்குறைவு. இஸ்லாமிய நாடுகள் உட்பட

தில்லை செந்தில் பிரபு

இப்பயிற்சிகள் ஏன் தேவையாகின்றன? உலகம் மேலும் மேலும் தொழில்நுட்பமயமாகி வருகிறது. கடுமையான போட்டியின் வழியாகவே கல்வி, வேலை, தொழில் எல்லாமே நிகழ்கின்றன. ஆகவே மனிதர்கள் எப்போதும் முழுச்செயல்வேகத்துடன் இருந்தாகவேண்டியிருக்கிறது. அதை தவிர்க்கவே முடியாது.

ஒரு விலங்கு வேட்டையாடும்போதும், வேட்டையாடப்படும்போதும்தான் அது உச்சகட்ட செயல்வேகத்துடன் உள்ளது. அட்ரினல் என்னும் மூளைச்சுரப்பி (Adrenal ) அச்செயல்வேகத்தை உருவாக்குவதற்காகவே உள்ளது. அது எப்போதாவதுதான் உயிர்களுக்குத்தேவையாகிறது. அது சுரந்தால் உயிர்களின் இதயவேகம் அதிகரிக்கும். ரத்தத்தில் குளூக்கோஸ் தேவை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் கூடும். ஆனால் நமக்கு இன்று ஒவ்வொருநாளும் அச்சுரப்பி சுரந்தாகவேண்டியிருக்கிறது. இது நம்மை நோயுறச்செய்கிறது.

இன்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவை பெருகியுருப்பதற்குக் காரணம் இதுதான். மன அழுத்தம் அதன் விளைவான மனச்சோர்வு பெருகியிருப்பதும் இதனால்தான். கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி பெருகியிருப்பதும் இதனால்தான். இவை நாகரீகம் உருவாக்கும் நோய்கள்.

இந்நோய்களுக்கான மருத்துவமுறைகள் உள்ளன. கடுமையான நிலையில் மருத்துவத்தையே நாடவேண்டும். ஆனால் இந்நோய்கள் வராமல் தடுப்பதும், வந்தபின் வாழ்க்கைமுறையை சீரமைத்துக்கொள்வதும் மேற்குறிப்பிட்ட யோகம், தியானம் முறைகள் வழியாக சாத்தியம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் அவை புகழ்பெற்றுள்ளன.

வி.அமலன் ஸ்டேன்லி

(வி.அமலன் ஸ்டேன்லி நடத்தும் விபாசனா பயிற்சிகள்,நாள் ஜூலை 5,6  மற்றும் 7  (வெள்ளி, சனி ,ஞாயிறு)

அம்மூன்று முறைகளையும் குறைந்த செலவில் பயிற்றுவிக்க ஆசிரியர்களைக் கண்டடைந்துள்ளோம். பிற அமைப்புகளிலுள்ள இரு பிரச்சினைகளை தவிர்க்கிறோம்

  1. பல அமைப்புகள் இப்பயிற்சிகளை ஓர் முதன்மையான மனிதரைச் சார்ந்து நடத்துகின்றன. அவரை வழிபடச்செய்கின்றன. அல்லது வேறுவகையான மதவழிபாடுகளை சேர்த்துக்கொள்கின்றன. இங்கே எந்த வழிபாடுகளும் இல்லை. எந்த மதச்சடங்குகளும் இல்லை. எல்லா மதத்தவரும், நாத்திகர்களும் கலந்துகொள்ளலாம்.
  2. பல அமைப்புகள் franchise முறைப்படி இவற்றை நடத்துகின்றன. ஓராண்டு பயிற்சி பெற்றவர் அடுத்து வருபவர்களுக்குக் கற்பிப்பார். நாங்க அந்த முறையை தவிர்க்கிறோம். ஏனென்றால் தியானம், யோகம் ஆகியவை வெறும் உடற்பயிற்சிகளோ மனப்பயிற்சிகளோ அல்ல. அவற்றுக்கு ஓர் ஆசிரியர் வேண்டும். அவர் குரு நிலையில் இருப்பவராக இருக்கவேண்டும். அவர் தன் மாணவர்களிடம் முழுமையான மனத்தொடர்பு கொண்டிருக்கவேண்டும். வாழ்க்கை முழுக்க வழிநடத்தவேண்டும்.அவருக்கு தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றில் பயிற்சி இருக்கவேண்டும். மனமுதிர்ச்சி பெற்ற ஆளுமையாக அவர் இருக்கவேண்டும். அத்தகைய ஆசிரியர்களையே நாங்கள் முன்வைக்கிறோம்.

எங்கள் பயிற்சிகளை குரு சௌந்தர் (யோகம்) தில்லை செந்தில்பிரபு (தியானம்) வி.அமலன் ஸ்டேன்லி (விபாசனா) ஆகியோர் நடத்துகிறார்கள். அவர்கள் வெறும் பயிற்சியாளர்கள் அல்ல, பெரும் ஆசிரியர்களும் வழிகாட்டிகளும் ஆவார்கள்.

ஜெ

காணொளிகள்

 

 

 

முந்தைய கட்டுரைபோர்வாள்
அடுத்த கட்டுரைநாத்திகன் கோயிலுக்கு செல்வது…