தமிழகத்தின் நாடோடிச் சாதியில் ஒன்று. இவர்கள் வட ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள். குடுகுடுப்பை நாயக்கர்கள் பகல் பொழுதில் கைரேகை பார்ப்பதும் நடு இரவில் குடுகுடுப்பை அடித்து குறிச் சொல்வதும் தொழிலாகக் கொண்டவர்கள். சுவடி வாசித்து எதிர்காலம் சொல்வது, பகல் வேடமிடுவது, தோஷம் தீர்க்கும் சடங்கு நிகழ்த்துவது போன்ற தொழிலையும் மேற்கொள்கின்றனர். வேட்டையாடுதல், மீன் பிடித்தல், பழைய துணியை யாசித்து விற்பது, பிச்சையெடுப்பது போன்ற நாடோடி வாழ்வை நடத்துபவர்கள்.
தமிழ் விக்கி குடுகுடுப்பை நாயக்கர்