சுவாமி கமலாத்மானந்தர் சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் ஆகியோரை ஆழ்ந்து கற்று, அவர்களின் பொதுவாழ்க்கையை ஆய்வு செய்து ‘சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை’ என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக எழுதினார். இந்நூல் ஒரு முன்னோடி நூலாகக் கருதப்படுகிறது. இது நேரடியான தரவுகளுடன் ஒரு காலகட்டத்தின் பொதுவான உளநிலையை, வரலாற்று உள்ளடக்கத்தை வெவ்வேறு ஆளுமைகளின் சொற்கள் வழியாக கண்டடையும் முயற்சி.ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் சிந்தனைகளை தமிழ்ச்சூழலில் பரப்பியவர் என்னும் வகையில் சுவாமி கமலாத்மானந்தர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.