அண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்

நான் இந்த உரையாடல்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தேன் இங்கு சில அடிப்படையான கேள்விகளை எழுப்பி அதன் பதில்களைக் கொடுத்து இருக்கிறேன். இது,இங்கு எழுப்பப்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்ற ஒரு நம்பிக்கையுடன்.


கேள்வி 1: ஊழல் என்பதோ அதற்குப் போராடுவதோ ஒன்றும் புதிய செய்தி கிடையாது,அப்படி இருக்கும் போது இப்போது அன்னாவிற்கு மட்டும் எப்படி இவ்வளவு ஆதரவு?

எனது பதில்: இதற்கு முன்பு நடந்த எல்லாருக்கும் தெரிந்த போபோர்ஸ் ஊழலை எடுத்துக் கொண்டால், அதை நடத்தியது அரசியல் கட்சிகள் அதற்கான ஆதரவு அந்தக்கட்சித் தொண்டர்களிடையே மட்டுமே அதிகம் இருந்தது. மக்கள் அந்த ஊழலைஎதிர்த்தாலும் அதில் பங்கேற்றது மிகக் குறைவே.
இதற்கான காரணமாக நான் நினைப்பது பொது மக்கள் ஒரு கட்சி சார்பு நிலையில் இருந்தாலும் அதில் நேரடியான ஈடுபாடு குறைவாகவே இருக்கிறது. முக்கியமாகஅனைவருக்கும் அவரவர் குடும்பம் நண்பர்கள் என்ற தொடர்புகள் பாதிக்கும் என்ற எண்ணம் அதிகம் இருக்கிறது. இப்போது இதற்கான அறைகூவல் அன்னாவிடம் இருந்து வந்தததும் (கட்சி சார்பு இல்லாமல்) அதுவும் வன்முறை இல்லாத வழி
முறையாக இருப்பதும் அனைவரின் ஈடுபாட்டை அதிகப்படுத்தி இருக்கிறது.

இதில் எந்த ஒரு நிர்ப்பந்தமும் (ஒரு நாள் முழுதும் இருக்கவேண்டும், ஒரு வாரம் முழுதும் இருக்கவேண்டும், கட்சியில் சேர வேண்டும்) இல்லாமல் இருப்பதால் வெவ்வேறு மக்கள் வெவ்வேறு நேரங்களிலும் நாட்களிலும் அவர்களதுஆதரவைக் கொடுக்க முடிவது அவர்களது இயல்பு வாழ்க்கையைப் பெருமளவு பாதிப்பதில்லை.மற்றும் முக்கியமாக அவர்களது வருமானம் பெருமளவில்
பாதிக்கப்படவில்லை.

கேள்வி 2 : இதை எவராவது தூண்டி விட்டு செய்கிறார்களா?

எனது பதில்: ஆம். இதைத் தூண்டியது அன்னா மட்டுமே. மற்றவர்கள் அன்னாவுடன் ஏறக்குறைய ஒத்த கருத்துள்ளவர்கள் இணைந்தார்கள், அவர்களின் காரணமாக மற்றவர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்ற காரணத்தினால் இணைந்து இருக்கிறார்கள். எங்கே அன்னா அனைவரும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அவர்களுடைய வேலைக்கு விடுப்பு எடுக்கவேண்டும் என்ற ஒரு கருத்தை சொன்னால் மட்டுமே போதும், இந்தப் போராட்டம் பிசு பிசுத்துவிடும். ஆனால் அவர் அப்படி
ஒன்றையும் சொல்லவில்லை. மேலும் அவருடன் இருப்பவர்கள் சொல்லும் அளவுக்குக் கூட அவர் எதையும் சொல்லவில்லை.

கேள்வி 3 : அவர் ஏன் காங்கிரஸ், பிஜேபி அல்லது abc கட்சியை ஊழல் கட்சி என்று சொல்லவில்லை அவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்?

எனது பதில்: அவர் எந்தக் கட்சியையும் அல்லது எவரையும் எதிர்த்துப்
போராடவில்லை. அவர் போராடுவது ஊழலைக் கட்டுப்படுத்த ஒரு அமைப்பிற்காக மட்டுமே. அதற்கு யாரிடம் பேசவேண்டும்? சட்டம் இயற்றும் அல்லது அதை விவாதிக்க அனுமதி உள்ளவரிடம் பேசவேண்டும். அது யார்? இப்போது ஆட்சியில் காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் அவர்களுக்கு அதில் மேலான கை (upper hand )
இருப்பது இயல்பே என்பதால் அவர்களிடம் செல்கிறார். அதே சமயம் எதிர்க்கட்சிகளிடமும் உரையாடுகிறார்.

கேள்வி 4 : அவர் ராகுல் காந்தியை அரசியல் தலைமைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறாரா?

எனது பதில்: அடுத்தது ராகுல் காந்திதான் காங்கிரசுக்குத் தலைமை தாங்கப் போகிறார்(ஏதாவது வித்தியாசமாக exceptional காரணிகளைத் தவிர) என்பது ஒன்றும் யாருக்கும் தெரியாத ஒரு செய்தி கிடையாது. அது அவருக்கும் தெரியும் அதனால் அவரிடம் பேச முயற்சி எடுக்கிறார். இதைத் தவிர அனைத்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தாலும் அதற்கு சோனியா அல்லது ராகுல் ஆதரவு இருந்தால் போதும் என்பதும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். அது
அவருக்கும் தெரியும் அதனாலேயே அவர் சோனியா மற்றும் ராகுலிடம் பேசவிரும்புவது. எளிதாக அனைத்துத் தடைகளையும் தாண்டி விட முடியும். அப்படி அவர்கள் நேரடியாக முடியாது என்று சொன்னால் அவர்கள் நாட்டு மக்களிடம் நம்பிக்கை இழப்பர். அது அவர்களுக்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியும்.

கேள்வி 5 : அவர் ஏன் ஊழல்வாதிகளான காங்கிரசிடம் இதை
விவாதிக்கிறார்?

எனது பதில்: நல்ல கேள்வி என்னிடம், அநீயிடம், ஜெயிடம், அரங்கரிடம்,…விவாதிக்கலாம்.ஆனால் என்ன செய்ய முடியும், ஒரு நாளோ அல்லது ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ விடுப்பு எடுத்துப் புரட்சி செய்யலாம் அதன் பின் கண்டிப்பாக நான் வரமாட்டேன் இன்னும் சில நாட்களுக்குப் பிறகு இன்னும் ஒருவர் வரமாட்டார். அவ்வளவுதான். ஆனால் இதையே ஆட்சியாளரிடம் விவாதிப்பதால் ஒரு சட்டம் (rule அல்லது ஒரு process ) கொண்டு வர முடியும். அப்படிக் கொண்டு வந்தால் அதை மீறும் பொழுது உயர் அல்லது உச்ச நீதி மன்றம் கேள்வி கேட்கும். அதுவும் அரசால் கட்டுப்படுத்தப்படாத அமைப்பாக இருக்கும் பொழுது இன்னும் அதற்கான சக்தி கூடுகிறது. (election commission ஐ நினைத்துப் பாருங்கள் ஒரு சேஷன் என்ன செய்ய முடிந்தது என்று)

கேள்வி 6 : இதை எவராவது hi – jack செய்துவிட்டால் என்ன செய்வது?

எனது பதில்: ஓரளவிற்கு இது முடிந்தாலும் அதற்கான control process
இருந்துவிட்டால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு மேலும் இதை நக்சல்கள் கடத்தினால் என்ன செய்வது. இதை ஒரு சின்ன எதிர் கேள்வியால் இயல்பாக எதிர்கொள்ளலாம், ஏன் அவர்களால் இப்போது ஒரு கும்பல் சேர்க்க முடியவில்லை? மிக எளிது அவர்களின் வழி முறைகளுக்குப் பொது மக்கள் ஆதரவு கிடையாது.

Process to be continously monittored and enhanced . It should never be
stopped .

திவாகர் நடராஜன்

அண்ணா ஹசாரே இணையதளம்

அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்
அடுத்த கட்டுரைஅண்ணா, இன்றைய பேச்சுவார்த்தைகள்