மருத்துவம், கடிதம்

2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆசான் ஜெயமோகனை சந்தித்து கையெழுத்துக்காக புத்தகத்தை நீட்டிய போது அவர் சொன்ன முதல் வார்த்தை பயிற்சிவகுப்புகளுக்கு  வந்திருக்கீங்க இல்லையா என்றுஇல்லை சார் தன்னறம் விருது விழாவில் சந்தித்தோம் என்று கூறிவிட்டு நகர்ந்து விட்டேன்..

2024 சென்னை புத்தகக் கண்காட்சியிலும் ஆசான் கேட்ட முதல் கேள்வி பயிற்சிவகுப்புகளுக்கு வந்தீங்க தானே என்றுஅப்போதும் இல்லை என்று சங்கடத்துடன் கூற நேர்ந்தது….

அடுத்த வருடம் நானாக கூறுவேன் இத்தனை வகுப்புகளில் பங்கேற்று பயனடைந்தேன் என்று ..

அப்படியாகத்தான் நவீன மருத்துவ வகுப்புக்கு பதிந்து சென்னையில் இருந்து வெள்ளிமலை வந்தடைந்தோம் நானும் என் தங்கையும்

டாக்டர் மாரிராஜ் ..அறிவு ,தெளிவு, எளிமை ,பொறுமைஇப்படித்தான் இவரை உருவகப்படுத்த முடிகிறது…. இரவு முழுக்க பயணம் செய்துதான் அனைவருமே காலை வந்து அமர்ந்தோம் வகுப்புக்குஒருவரையும் சோர்வடைய விடாமல் வகுப்பை அவர் கொண்டு சென்ற விதம் அற்புதம்..

மருத்துவத்தின் வரலாறு ,படங்களோடு கூடிய உள் உறுப்புகளின் செயல்பாடுகள், அவற்றின் பயன்கள் உடலை தாக்கும் ,காக்கும்  கிருமிகள்.. அவற்றின் நன்மைகள் தீமைகள் என தெளிவான விளக்கம்மருந்துகளின் தன்மைகள், உருவாகும் விதம், அவற்றை சந்தைப்படுத்துதல் என விளக்கம் அளித்தார் டாக்டர் மாரிராஜ்

இவரிடம் வரும் நோயாளிகளை ஒரு கணம் நினைத்துக் கொண்டேன். உட்கார வைத்து அருகமர்ந்து சிறிது நேரம் இவர் பேசியே பாதி நோயை சரி செய்து விடுவார் போலவே என்றுமதிய உணவுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது கூட கோவை அன்பர் ஒருவர் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். அப்போதும் அதே முகம் மாறாத பொறுமையோடு பதில் அளித்து கொண்டிருந்த டாக்டரின் கனிவு அபாரம்

உணவுப் பழக்கவழக்கம் ,உடற்பயிற்சி, என்னை சார்ந்தோரின் ஆரோக்கியம் என நிறைய மாற்றங்கள் என் அன்றாடங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது பயிற்சி வகுப்பிற்குப் பிறகுஉள்ளிருந்து ஒரு மகிழ்ச்சியும் துள்ளலும் என்னுள் இணைந்திருப்பதை என் உடலும், நானும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்

வெவ்வேறு ஊர்கள் ,வெவ்வேறு தளங்களில் இருந்து வந்திருந்த அனைத்து நண்பர்களையும் ஒருசேர உணர முடிந்தது அனைவருமே ஒரே ஆலமரத்தின் அடியமர்ந்தவர்கள் என்றுஜெயமோகன் என்னும் விருட்சம் அது

நன்றியுடன் 

நிர்மலா.

முந்தைய கட்டுரைவடிவங்கள், வரையறைகள்
அடுத்த கட்டுரைகாடும் விடுதலையும்