நவவேதாந்தம்

இந்திய வேதாந்த மரபின் நவீன வடிவம். வேதாந்தக் கொள்கை காலப்போக்கில் சாதிய அமைப்புடனும், இந்திய ஆசாரவாதத்துடனும், இந்து வழிபாட்டு முறைகளுடனும் சமரசம் செய்துகொண்டு அதன் அடிப்படைகளை தவறவிட்டுவிட்டது என்று எண்ணிய ஞானிகள் வேதாந்தத்தின் தத்துவ அடிப்படைகளை  சமரசமில்லாமல் வலியுறுத்தியமையால் உருவானது. பின்னர் அவர்களின் மாணவர்களால் இந்திய வேதாந்தத்தை நவீன காலகட்டத்தின் மானுடவிடுதலைக் கருத்துக்களுடனும், சமூக மறுமலர்ச்சிக் கருத்துக்களுடனும், நவீன ஐரோப்பிய தத்துவக் கருத்துக்களுடமும் இணைத்து விரிவாக்கம் செய்வதன் வழியாக விரிவாக்கப்பட்டது. இந்திய மறுமலர்ச்சியில் நவவேதாந்தம் பெரும் பங்களிப்பாற்றியது. உலகுதழுவிய இந்து தத்துவமாக இன்று நிலைகொள்கிறது.

நவவேதாந்தம்

நவவேதாந்தம்
நவவேதாந்தம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅமெரிக்க இளையதலைமுறையில் இருந்து…
அடுத்த கட்டுரைபித்தன் வருகை