பைபிள் கற்பவர் எவர்?

அன்புள்ள ஜெ

நீங்கள் பைபிள் வகுப்புகள் நடத்துவதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதெல்லாம் செல்லும் திசை அதுதான். என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.  பைபிள் வகுப்பிலே சேர்பவர்கள் எல்லாருமே இந்துக்களாகவே இருப்பார்கள் என்பது சந்தேகமில்லை. உங்கள் இந்து தத்துவம், சைவம் ,வைணவம் வகுப்புகளில் எந்தக் கிறிஸ்தவராவது சேர்ந்திருக்கிறார்களா?

சாரதி கிருஷ்ணா

அன்புள்ள சாரதி

உங்கள் முன்முடிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

இதுவரை கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இல்லாத ஒரு இந்து தத்துவ வகுப்பு கூட நடைபெற்றதில்லை. அதைச் சொன்னால் உடனே விவாதம்தான் செய்வீர்கள். நம்ப மாட்டீர்கள். ஆனாலும் இதுவே உண்மை.

ஏன் அவர்கள் கலந்துகொள்ள முடிகிறது என்றால் இது கலை – தத்துவ வகுப்புதானே ஒழிய மதவகுப்பு அல்ல. மதம் இதில் ஏற்பாகவோ மறுப்பாகவோ பேசப்படுவதில்லை.

இந்த வகுப்புகளில் முழுமையாகவே மதமும் அரசியலும் தவிர்க்கப்படுகின்றன. ஒரு சொல்கூட இல்லாமல். வகுப்பிலும் வெளியிலும்

ஜெ

பிகு

ஆன்மிகமான பயணம் வழியாக பைபிளை அறிவதற்கான கல்வியை சிறில் அலெக்ஸ் நடத்துகிறார். அது பிற மெய்யியல்களுடன் இணைத்து ஓர் ஒட்டுமொத்த அறிதலை, அகவிரிவை அடைவதற்கான பயிற்சியும்கூட

ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் பைபிள் வகுப்புகள் நிகழும்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

*


சைவசித்தாந்த வகுப்புகள், முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

நிகழ்வு ஜூன் 7, 8 மற்றும் 09 தேதிகளில் நிகழும் (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைதும்பி இதழ் நிறுத்தம், கடிதம்
அடுத்த கட்டுரைநிஷா மன்சூர்