டானியல் கானமென்

அன்புள்ள ஜெ,

மிகவும் புகழ்பெற்ற Thinking Fast and Slow என்ற புத்தகத்தை எழுதி அதற்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், Behaviour economics பிதாமகர் Daniel Kahneman (5 Mar 1934 – 27 Mar 2024) சென்றவாரம் மறைந்தார். நம் நண்பர்களுடனான உரையாடல்களில் அவர் பெயர் அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும்.

இவரது புத்தகத்தை வழக்க்கமான தன் முன்னேற்ற புத்தகம் என்று வகைப்படுத்தமுடியாது, நமது சிந்தனை மாடல்கள், அதன் bias அதன் காரணம் என மனித மனத்தை மிகவும் ஆராய்ச்சி செய்து எழுபட்ட புத்தம் அது. உண்மையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல முக்கிய்மான புத்தகங்களில் இவரது ஆராய்ச்சி மற்றும் முடிவுகள் பற்றி ரெபர்ன்ஸ் செய்ப்படும் புத்தகங்கள் ஏராளம்.

அவர் மறைந்த நாளில் இதை ஏன் நம் நண்பர்களோடு பேசக்கூடாது என ஒரு உரையாடல் + விவாதம் என செய்தோம். நம் நண்பர்களோடு நடக்கும் உரையாடல்கள் பயணங்கள் எல்லாம் சுவையாக இருப்பதற்குக்காரனம் அங்கு நடக்கும் நட்பார்ந்த உரையாடக்கள், எனவே அதே நட்பு உரையாடல் பார்ப்மெட்டில் உரையாடலாம் என நினைத்தோம்.

சிரில் அலெக்ஸ், சித்தார்த், ரவிக்குமார் பாண்டியனோடு நானும் செய்த உரையாடல் இது.

Daniel Kahneman பற்றிய ஒரு அறிமுகம், mental models மற்றும் bias உருவாகி வந்தது, அதன் பலன்கள் மற்றும் போதாமைகள் என பேச ஆரம்பித்து அதன் அடுத்த இடமான செயற்கை அறிவு, reductionism என பல விஷயங்கள் தொட்டுச் சென்றது இந்த உரையாடல்.

சிரில் அலெக்ஸ், சித்தார்த், ரவிக்குமார் பாண்டியன் எல்லோருமே அடிக்கடி உரையாடிக்கொள்ளும் ஒருவர் வாசிப்பு மீது மரியாதை கொண்டவர்கள் தான் என்றாலும், இப்படி ஒரு உரையாடலை ரெகார்ட் செய்து பார்க்கும்போது நமது பார்வைகள் இன்னும் துல்லியமாகத் தெரிகிறது.

இதுப்போன்ற புத்தக சிந்தனை தொடர்பான விஷயங்களின் தொடர்ந்து உரையாடல் எனவும் நினைக்கிறோம். நேரம் கிடைத்தால் இதை பார்த்து தங்கள் கருத்துக்காகவும் ஆலோசனைக்கவும் இதை தங்களுக்கு அனுப்புகிறேன்.

Part 1: சரியாகத்தான் சிந்திக்கிறோமா? ஸிஸ்டம் 1 & 2 என்ன செய்கிறது? Daniel Kahneman | Thinking fast and slow

https://www.youtube.com/watch?v=aPRt-zXqyls

Part 2: யுவால், Fukuyoma வெறும் reductionistகளா? மனிதத்துக்கு எதிரானதா Mental models, ChatGPT மற்றும் AI

https://www.youtube.com/watch?v=H1l5NFVwVkE

அன்புடன்

சுரேஷ் பாபு

S. Suresh Babu

Blog: வேழவனம்

Youtube: https://www.youtube.com/@repairkadai

முந்தைய கட்டுரைவே.நி.சூர்யா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகமலா சடகோபன்