அந்த மெல்லிய நூல்

A Fine Thread And Other Stories வாங்க

வணக்கம் ஜெ,

நலமா, மீண்டும் பூன் முகாமில் உங்களை சந்திப்பதில் அமெரிக்கா நண்பர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம். போன வருட இலக்கிய முகாம் பற்றி இன்னும் பேசி முடிந்தபாடில்லை நாங்கள்.  நண்பர் ஜெகதீஷ் மொழிபெயர்த்த ‘A Fine thread and Other Stories’  புத்தகத்தை வர்ஷாவிடம் கொடுத்து வாசிக்க சொன்னேன். வாஷிங்டன் பயணத்தின் போது படிக்க தொடங்கினாள். உனக்கு புடித்த கதையை பற்றி விமர்சனமாக அல்லாமல், புரிந்து விஷயங்களை எழுத்தாளருக்கு எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். எழுதியதை வாசித்தபோது  மொழிபெயர்ப்பு அமெரிக்கா குழந்தைகளுக்கு எளிதாக கதையை கொண்டு சேர்க்கிறது. அது ஜெகதீசின் உழைப்புக்கான  வெற்றியாகவே பார்க்கிறேன். அவருக்கு மனமார்ந்த நன்றி. வர்ஷா இரு கதைகளை பற்றி  எழுதியுள்ளாள். இந்திய மரபினை பற்றிய சில அடிப்படைகளை தெரிந்துகொண்டு  மற்றக் கதைகளையும் சேர்ந்து  வாசிக்கலாம் என்று சொன்னேன்.  அவளிடம் ஈமெயில் ஐ.டி இல்லாதால் என்னுடைய ஈமெயிலில் இருந்து அனுப்புகிறேன். நன்றி ஜெ.

விவேக்

 Varsha’s Letter 

Dear Writer Jeyamohan,

Journey to Washington DC with ‘A fine thread and other stories’ Book:

It was a remarkable spring break that I spent with my father as we journeyed to Washington DC. As you may know, spring holds a special significance in the capital city of the United States, with the iconic cherry blossoms adorning the landscape in shades of purple and white. It was truly exceptional to witness this natural spectacle together. A standout experience was our visit to a museum dedicated to African American history, which illuminated their rich cultural heritage and the adversities they endured. My father reminisced about his prior visit to the same museum with the writer Jeyamohan during a trip to the United States,My dad remarked that writer Jeyamohan genuinely appreciates and respects diverse cultures, as we were exploring the museum. Within the museum, we bore witness to the struggles endured by African Americans, notably the harsh reality of segregation. Exploring a replica bus, we were struck by the stark division between seating for white and black individuals, evoking a deep sense of empathy for the challenges they faced during that era. My favorite aspect of the museum was the musical exhibit, where I thoroughly enjoyed immersing myself in their rap, hip hop, and rock songs. One track, “Self Destruction,” particularly resonated with me for its poignant exploration of the hardships faced by African Americans.

As our five-hour road trip progressed, boredom began to set in, but my father came to the rescue by presenting me with a second book, “A Fine Thread,” translated by Jegadeesh Kumar. This followed my enjoyment of stories such as “Elephant Doctor” and “A Hundred Armchairs” from the “Stories of the True” collection. “A Fine Thread” proved to be a captivating read, enriching the remainder of our journey.

My top favorite chapter from ‘A Fine Thread and Other Stories’ is ‘Shadow Crow.’ It recounts the tale of a monk named Asita journeying through Sri Lanka, where he encounters Narayana Guru, who claims to be a Buddhist, surprising Asita. Their conversation delves into various aspects of Buddhism, including a discussion of Advaita. Meanwhile, at the Ramakrishna monastery, a debate arises regarding the concept of dispassion, with Vishwananda likening art to a cuckoo and later to a thief, prompting philosophical reflection. The narrative then shifts to a poignant family incident involving Asita’s grandfather and a crow. Despite warnings, the grandfather kills a crow, leading to a series of ominous events where subsequent generations are plagued by crow attacks. This haunting cycle persists until Asita, now living in the Himalayas, encounters a raven during a harsh winter. Instead of harm, the raven offers unexpected affection, marking a turning point in Asita’s relationship with crows. Eventually, through empathy and understanding, Asita finds solace and safety, ending the cycle of attacks. The chapter beautifully explores themes of karma, family legacy, and redemption, culminating in a heartwarming resolution where compassion triumphs over fear.

The Last Machine tells the tale of a scientist named Don who invents a machine capable of making people vanish. When three men, Grigor, Yevgeny, and Ivan, inquire about the machine, Don, feeling a bit embarrassed, reveals he is a nomad without a homeland and his name, though Spanish-sounding, lacks real meaning. Despite this, the men listen intently. Don explains that he created the machine but lacks permission to share it with the world. Suddenly, the Chancellor enters the room and inquires about the machine’s purpose. Don proudly declares it is meant to obliterate history. Intrigued, the Chancellor asks to try the machine himself. Don agrees, and the Chancellor selects Grigor as the test subject. As the machine is activated, Grigor lets out a cry and disappears before everyone’s eyes. Astonished, they search for any trace of Grigor but find nothing. Don then presents the machine as a gift to the Chancellor, who expresses gratitude, leaving Don with a sense of pride.I understand how scientific advancements can sometimes be utilized for bad intentions.

As I progress through the book, I intend to provide further reviews once I have developed a solid understanding of the stories rooted in Indian legacies.

I wholeheartedly recommend this book to my fellow readers, especially those who have immigrated from India. I take this opportunity to extend my gratitude to writer Jeyamohan and translator Jegadeesh Kumar for crafting such an enriching literary work.

With Love,

Varsha Vivek

 

*

 

அன்புள்ள விவேக்

வர்ஷாவிடம் என் அன்பைச் சொல்லுங்கள்.

நான் எப்போதுமே சொல்லிவருவது ஒன்றுதான். அமெரிக்காவின் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு இந்தியக் கல்விநிலையங்களில் பயிலும் குழந்தைகளை விட இலக்கியம்- தத்துவம் ஆகியவற்றைப் பயில்வதற்கான ஆற்றல் மிக அதிகம். இங்குள்ள மிக முதன்மையான பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை விட பல மடங்கு என்றே சொல்வேன். அங்குள்ள பாடத்திட்டம், பயிற்றுமுறை அப்படிப்பட்டது. அமெரிக்கச் சூழலில் பிறந்தமையால் உருவாகும் விலக்கம், அங்குள்ள சூழலில் உள்ள திசைதிரும்பல்கள் கூரிய குழந்தைகளுக்குப் பெரிய தடை அல்ல. மிக எளிதாக அவர்களால் இந்தியாவின் முதன்மையான இலக்கிய ஆக்கங்களுக்குள் செல்ல முடியும்.

அதற்கு முதன்மையான தடையாக அமைபவர்கள் அங்குள்ள நம் பெற்றோர்தான். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஓர் உலகை நோக்கி குழந்தைகளை இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவை இரண்டு வகை உலகங்கள். ஒன்று, வணிகவெற்றிக்கான தொடர்போராட்டம் மட்டுமே கொண்டது. கல்வி என்பது அதன்பொருட்டே. அறிவுச்செயல்பாடுகள் மேல் மதிப்பில்லை, அறிமுகமும் இல்லை. இரண்டு, இங்குள்ள எளிய சாதியரசியல், மத அரசியலுக்குப் பண்பாட்டுச் சாயம்பூசி அதில் திளைப்பது. இவ்விரு காரணங்களால் குழந்தைகளுக்கு தமிழின் உண்மையான இலக்கியங்களை, தத்துவங்களை அவர்கள் அறிமுகம் செய்வதே இல்லை. செடியாக இருக்கையில் காவலுக்கு வைக்கப்பட்ட  இரும்புத்தொட்டி வளர்ந்த மரத்தை இறுக்குவதுபோல அவர்கள் குழந்தைகளை இறுக்குகிறார்கள்.

அதைக் கடந்து சில குழந்தைகள் எதிர்காலத்தில் வரக்கூடும். உடைக்கப்படவேண்டியது ஒரு மெல்லிய நூல்மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைவே.நி.சூர்யா, ஒரு வாழ்த்து -அமிர்தம் சூர்யா
அடுத்த கட்டுரைஉமா ஷக்தி