ஏப்ரல் 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் சபரிநாதனின் புதிய கவிதைத் தொகுப்பான ‘துஆ’ நூலிலிருந்து கவிதைகள் உள்ளன. கடலூர் சீனு ஆக்டேவியா பாஸின் கவிதையை மொழிபெயர்த்து அதைப் பற்றிய கட்டுரையும் எழுதியுள்ளார். அரவிந்தரின் ‘The sources of poetry’ என்ற கட்டுரையை சியாம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
கமலதேவி விக்ரமாதித்யன் கவிதை பற்றியும், மதார் வ. அதியமானின் புதிய கவிதைத் தொகுப்பான குடைக்காவல் நூல் குறித்தும் எழுதிய வாசிப்பனுபவ கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு
(மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)