முழுமையறிவு- குரு நித்யா வகுப்புகள் என ஓர் அமைப்பாக இப்போது ஆக்கியிருக்கிறோம். எதையும் சிறிய அளவில் செய்து பார்த்து, விளைவுகளையும் எதிர்விளைவுகளையும் எல்லைகளையும் கணக்கிட்டு, முன்னெடுப்பதே என்னுடைய வழி. காந்தியின் வழி அது. இம்முறையும் அதுவே. இரண்டு ஆண்டுகளில் இவ்வகுப்புகள் எனக்கு அளித்த நம்பிக்கை மிகப்பெரியது. இதில் பங்குகொண்டவர்கள் அடைந்த பயன் அதைவிடப்பெரியது என ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கும் கடிதங்கள் சொல்கின்றன. ஆகவே எங்கள் வாசக வட்டத்தில் இருந்து வெளியே சென்றும் பங்கேற்பாளர்களை தேடும்பொருட்டு இந்த காணொளி வரிசை. இது முதல் காணொளி
பயிற்சி வகுப்புகள் முழுமையறிவு, குரு நித்யா வகுப்புகள்