அண்ணா-எதிர்வினைகள்

“நாளையே விளம்பரத்துக்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் இருக்கும் அருந்ததி
ராய் போன்றவர்களும் இப்படிக் கிளம்பக்கூடும்.”

வந்து விட்டார்!

இன்றைய இந்து நாளிதழில் அவரது ” நான் அன்னாவாக இல்லாமல் தான் இருப்பேன்
” என்ற கட்டுரையை யாராவது படித்தீர்களா..? அவர் கருத்து, ”அன்னாவின்
வழிமுறைகள் வேண்டுமானால் காந்திய வழியிலிருக்கலாம். ஆனால் கோரிக்கைகள்
கண்டிப்பாக அப்படி அல்ல ”

அன்னாவின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஆய்வு செய்து எழுதப்பட்டு வரும்
தொடர்கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது மேசையில் வந்து விழுந்தது
பேப்பர். அருந்ததியின் தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது. என்ன செய்ய..?

வினோத்

http://www.thehindu.com/opinion/lead/article2379704.ece?homepage=true

அன்புள்ள வினோத்,

அருந்ததி வெளிவராமல் இருக்கமுடியாதென நான் அறிவேன், ஆகவேதான் சொன்னேன். அந்தப் பெண்மணியின் இலக்கு விளம்பரம் மட்டுமே.

இன்று அண்ணா ஹசாரே பற்றி அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி ஆராய்ச்சி செய்யும் கும்பல் இன்றுவரை அருந்ததி பற்றி என்ன சொல்லியிருக்கிறதென பாருங்கள். அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நேர்மை என்றாவது விவாதிக்கப்பட்டிருக்கிறதா? அவரது ஆர்ப்பாட்டங்களும் அதிரடிகளும் ஜனநாயகச் செயல்பாடுகள் என்றுதானே இவர்கள் பேசினார்கள்? நீதிமன்றத்தை அவமதித்து எழுதி ஒருநாள் சிறையிலிருந்ததை காந்தி சிறைசென்றதற்கு நிகராக எழுதினார்கள். அன்றெல்லாம் அந்த அம்மணியின் கலாட்டாக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்று எவரேனும் கேட்டிருக்கிறார்களா?

குறைந்தபட்சம் அவரிடம் ‘ஏய் நீ யார்?’ என்றாவது கேட்டிருக்கிறார்களா? உன் பின்னணி என்ன, நாட்டுக்காகவோ மக்களுக்காகவோ நீ எதையாவது எப்போதாவது இழந்திருக்கிறாயா? ஒரு கேள்வி வந்திருக்கிறதா? அண்ணா ஹசாரே எங்கிருந்தார் என்று கேட்பவர்கள் இந்த அம்மணி எங்கிருந்தார் என்று உசாவியிருக்கிறார்களா?

ஒரு அசட்டு பைங்கிளி நாவலை எழுதி அரைநிர்வாணப் படம் போட்டு விற்ற பெண் எப்படி ஒரு தேசியக் குரலாக முடியும் என எவரும் கேட்கவில்லை. ஆனால் காந்திய நிர்மாணத்திட்டத்தில் சாதனைகளைச் செய்து காட்டி முப்பதாண்டுக்காலம் பொதுவாழ்வில் போராடிய மனிதர் எப்படி தேசியக்குரலாக முடியும் என வெட்கம் மானமில்லாமல் வந்து ஊடகங்களில் கேட்கிறார்கள் அயோக்கியர்கள்.

ஏன்? ஏனென்றால் அண்ணா இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறார். இந்தியா மேல், இதன் கோடானுகோடி மக்கள் மேல், அவர்களின் ஆன்மீகவெளிப்பாடான இதன் ஜனநாயகம் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்தப்பெண்மணி இந்த நாடு உடைந்து அழிய விரும்புகிறார். இந்த ஜனநாயக மதிப்பீடுகளை அழிப்பதற்காக மட்டுமே எழுதுகிறார். இதன் மக்களின் ஆன்மாவை ஒவ்வொரு கணமும் அவமதிக்கிறார்.

கூலிப்படை அறிவுஜீவிகளுக்கு அப்பால் பார்க்கும் கண் என்று நமக்கு வாய்க்கும்?

ஜெ

ஜெ

http://viduthalai.in/new/headline/16358-2011-08-22-05-45-30.html#.TlH1t-UWIPM.facebook

முடியல!

கார்த்திகா பேச்சிநாதன்

அன்புள்ள கார்த்திகா பேச்சிநாதன்,

நமீதாவை நான் சந்தித்திருக்கிறேன். அவராலும் பிழையில்லாமல் ஆங்கிலம் பேசமுடியும். அருந்ததி ராய்க்கு இருக்கும் தகுதி அவருக்கும் இருக்கிறது.

ஜெ

அன்ணா ஹசாரே, சோ ,ஞாநி

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஜான்சன் சில பாடல்கள்
அடுத்த கட்டுரைபஷீர் காணொளி