நடராஜ குரு

நடராஜ குரு ஆன்மிக சிந்தனையாளர், தத்துவ சிந்தனையாளர் என இரு நிலைகளிலும் முக்கியமானவர். இந்திய ஆன்மிகசிந்தனையை மதம், சம்பிரதாயம், சடங்குகள், அமைப்புகள் என்னும் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே கொண்டுசென்று உலகளாவிய ஆன்மிக சிந்தனை மரபுகளுடன் உரையாடச்செய்தவர்களில் அவரே முதன்மையானவர். பின்னர் வந்த ஆன்மிக சிந்தனையாளர்கள் அனைவரிலும் நடராஜகுருவின் செல்வாக்கு உண்டு. தத்துவ சிந்தனையாளராக மானுடம்தழுவிய ஒருமைநோக்கு ஒன்று சிந்தனையில் உருவாவதற்கான வழிகளை முன்வைத்தவர், அறிவியல் தத்துவம் மற்றும் கலைகளை இணைத்துக்கொண்டு முழுமைநோக்கு ஒன்று உருவாகும் முறைமையை உருவாக்கியவர். அவ்வகையில் ஒருங்கிணைந்த மானுட அறிவு என்னும் சிந்தனையுடன் செயல்படும் தத்துவ அறிஞர்கள் நடுவே நடராஜகுருவுக்கு முதன்மையான இடம் உண்டு.

நடராஜ குரு

 நடராஜ குரு
நடராஜ குரு – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇரும்பு, கடிதம்
அடுத்த கட்டுரைதுறவின் நிலைகள்