2015 ல் நமது Shruti.TV YouTube Channel தொடங்கினோம். இதுவரை 9,200 வீடியோக்கள் பதிவிட்டுள்ளோம்.
அதில் இலக்கியத்துக்கான மட்டுமே 5,000 Videos இருக்கிறது. இலக்கியத்தை மையப்படுத்தி ஓடவேண்டுமென்ற குறிக்கோளுடனேயே லாப நோக்கமின்றி ஆரம்பித்தோம். இந்தப் பயணத்தில் உங்களைப் போன்றோர் ஆதரவுடனேயே இந்த அளவுக்கு வளர்ந்து இன்று Shruti.TV சேனல் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்து பயணிக்கிறது…
உடன் நின்ற உங்களுக்கும், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அடுத்த மைல்கல்லை நோக்கி நகர உங்கள் வாழ்த்தும் ஆசியும் எங்களுக்கு எப்போதும் போல கிடைக்கட்டும்.
நன்றியுடன்
S.கபிலன் – S.சுரேஷ் குமார்
அன்புள்ள ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு,
வணக்கம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள். சினிமா- அரசியல் வம்புகள் மட்டுமே மேலோங்கியிருக்கும் ஒரு சூழலில் பெரும்பாலும் இலக்கிய நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் ஓர் ஊடகம் இந்த வெற்றியை அடைந்திருப்பதென்பது ஒரு சாதனை.
தனிப்பட்ட முறையிலும் ஷ்ருதி டிவி எனக்கு முக்கியமானது. என் உரைகள் நேர்த்தியான ஒலி – ஒளி அமைப்புடன் ஷ்ருதி டிவியால்தான் வாசகர்களுக்குக் கிடைக்கின்றன.
இத்தருணத்தில் தமிழ் இலக்கியவாசகர்கள், எழுத்தாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
ஜெ