வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
ஒரு வழியாய் முடித்துவிட்டேன். பயணம் நேரமின்மையால் தொடர்ந்து படிக்க முடியாமல் பொய்விட்டது. இருந்தாலும் முடித்தே தீர்வது எனும் உத்வேகத்துடன் முடித்துவிட்டேன். விரிவான விமர்ச்னத்துக்கு நேரமின்மையால் சுருக்க விமர்ச்னம் மட்டும்.
முதல் சில பாகங்கள், கதாபாத்திர பெய்ர்கள் பாட்டனி நேம் மாதிரி இருந்தது.இருப்பினும் ஓரிரு முறை தொடர் வாசிப்பு மூலம் கைவரபெற்றது.
மொழி நடை அபாரம்.
ஆரம்பத்தில் வரும் ஆதநாகம்-தட்சகன்-மானசாதேவி-ஜனமேஜெயன்-வேள்வி என வியாசர் வழியே துவங்கி ஒவ்வொரு அத்தியயமும் கடந்து , பல சொல் அடுக்கில் நுழைந்து கடந்து வ்ந்தேன்.
பீஷ்மர் வரும்போதெல்லாம் மகாபாரத முகேஷ் கண்ணாதான் நினைவுக்கு வந்தார்.அம்பையின் அன்பை புறக்கணிக்கும் போது அவளுக்கு ஏற்படும் உணர்வு ந்மக்கு ஏற்படுவ்து போல் இருந்தது. புறக்கணிப்பின் எல்லை தற்கொலை வரை நீளுகிறது.ஆனால் அவள் மனம் பீஷ்மர் எனும் ஆளுமையை ஆசை கொள் (ல்)கிறது. வலிமையானவளாக அலைக்கப்படும் பெண்ணாக அம்பை.
அம்பையின் உணர்வு முதல் கனல் அடிநாதமாக உள்ளது. அம்பையின் அதே கனல் அப்படியே சிகண்டியிடம் வருகிறது.
*ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான மனமும் உடலும் படைப்புசக்தியால் அளிக்கப்பட்டிருக்கின்றன
*புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன
*வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது.
*அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே
*யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்” என்றாள்.
*பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே
*பகலில் இருளிறங்கியதுபோல
*ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை.
*ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்”
*இத்தனை தர்க்கங்களுக்கும் அப்பால் மழையில் கரைக்கப்படாத பாறைபோல அந்த உண்மை நின்றுகொண்டிருக்கிறது
*வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப்போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்து சென்றாள்
*என் மனம் விரைந்துகொண்டிருக்கையில் உடல் அமரமுடியாது.
*உண்மையில மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும பொருளற்றவையாகவே தெரிகின்றன
ஆஸ்திகனை அனுப்புவதல் தொடங்கி ஆஸ்திகன் திரும்பி வருவதில் முடிகிறது.
ரசித்த வரிகள் ஏராளம் சிலவற்றை மட்டும் கொடுத்திருக்கிறேன்
மணிகண்டப் பிரபு