சுவாமி பிரம்மானந்தர் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
வரும் திங்கட்கிழமை (25-03-2024), மலேசியாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தா, எழுத்தாளர் கோ. புண்ணியவான், சுவாமியின் மாணவர் செல்வம், குமாரசாமி ஆகியோர் அவர்களின் இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக கோவை வருகிறார்கள்.
சுவாமி பிரம்மானந்தாவின் வருகையை ஒட்டி திங்கட்கிழமை மாலை விஷ்ணுபுரம் அலுவலகத்தில் ஒரு வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளோம். விஷ்ணுபுரம் அலுவலகத்தின் மாடியில் சந்திப்பு நிகழும்.
நிகழ்வு சரியாக மாலை 5:30 மணிக்கு தொடங்கும்.
சுவாமியின் சிறு உரையுடன் நிகழ்வு தொடங்கும். பின் புத்தக வெளியீடு நிகழ்வும், வாசகர்களுடன் கேள்வி பதில் நிகழ்வும் உள்ளது. விருப்பமுள்ள நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்வு நேரம்: 25/03/2024 மாலை 5:30 மணி
நன்றி,
நவின். ஜி.எஸ்.எஸ்.வி.
தொடர்புக்கு: +91-7402389276