வாசிப்பை காட்சியாக்குதல்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

வணக்கம்

பல வருடங்களுக்கு முன்னரே வெண்முரசு தொடரை இணையத்தில் அம்மாவும் தம்பியும் வாசித்தனர். எனக்கும் படிக்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. தினம் ஒரு அத்தியாயம், தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் என எங்கள் வாசிப்பை நேசிப்போம் குழுமம் அதற்கு வழி வகுத்தது

ஒரு அத்தியாயத்தை முடித்துவிட்டு அடுத்ததற்கு வந்தால் திரும்பவும் முதல் அத்தியாயத்தை படிக்க வேண்டிய அளவிலான ஞாபக சக்தி தான் எனக்கு. அத்தோடு இல்லாமல் என் மகளுக்கு வேறு கதை சொல்ல வேண்டிய கட்டாயம்.அதனால் தான் வரைபடங்கள் வரைந்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன். சிறுபிள்ளைத் தனமாக தோன்றினாலும், சற்றே நேரம் இழுத்தாலும் எங்களுக்கு அந்த படங்கள்,குறிப்புகளின் மூலம் தொடர்ச்சியாக கதையினை விரைவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

இரண்டு அத்தியாயங்களுடைய குறிப்புகளை மட்டும் இத்துடன் இணைத்துள்ளேன்.

வெண்முரசு படித்தால் வேறு ஒரு தனி உலகத்திற்கு பிரயாணப்படுவோம் என்று எல்லோரும் சொல்வது உண்மைதான்.இன்னும் நான் முதல் புத்தகத்தை முடிக்கவில்லை.முடித்தவுடன் பதிவு எழுதுவேன்.

நன்றி

ரம்யா ரோஷன்  

முந்தைய கட்டுரையுவன் கனடா சந்திப்புகள்
அடுத்த கட்டுரைவாசகன், எழுத்தாளன் எனும் நிலைகள்