இந்திய தத்துவம் மூன்றாம் வகுப்பு

இந்திய தத்துவத்தின் மூன்றாம்நிலை வகுப்புகளின் இரண்டாவது அணி ஏப்ரல்  26, 27, 28 ஆம் தேதிகளில் நிகழும்.  இந்திய தத்துவம் முதல் இரு வகுப்புகளுக்கு வந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு [email protected]


முந்தைய வகுப்புகள் இடமிருப்பவை

 

தேதி வகுப்பு ஆசிரியர் இணைப்பு
ஏப்ரல் 5,6 மற்றும் 7 நவீன மருத்துவம், அறிமுக முகாம் மாரிராஜ் நவீன மருத்துவம், அறிமுக முகாம்.
ஏப்ரல் 12,13 மற்றும் 14 தத்துவ வகுப்பு – இரண்டாம்நிலை ஜெயமோகன்
ஏப்ரல் 19, 20 மற்றும் 21 காட்சிக்கலைப் பயிற்சி ஏ.வி.மணிகண்டன் காட்சிக்கலைப் பயிற்சி
ஏப்ரல்  30 மற்றும் மே 1 மாணவர்களுக்கான ஒரு தனிப் பயிற்சியை நிகழ்த்தும் திட்டம் உண்டு ஜெயமோகன்
மே 3,4 மற்றும் 5 சைவத் திருமுறைகளின் மீதான வாசிப்புப் பயிற்சி மரபின் மைந்தன் முத்தையா
மே 7,8 தேதிகளில் (செவ்வாய் புதன் இரண்டு நாட்கள்) இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு உதவும் கவனக்குவிப்பு- ஊழ்கப்பயிற்சி. தில்லை செந்தில் பிரபு
மே 17 18 மற்றும் 19 இப்பயிற்சி இதுவரை யோகப்பயிற்சி பெற்ற அனைவரும் வந்துகூடுவதற்கானது. ஒரு பொதுக்கூடுகை மற்றும் பயிற்சி இது. அவர்களின் பயிற்சிநிலை, அதன் தொடர்ச்சி ஆகியவற்றை ஆசிரியர் பரிசீலிப்பார் குரு சௌந்தர்
மே 24 25 மற்றும் 26 குருநித்யா  இலக்கிய விழா

 

நவீன மருத்துவம், அறிமுக முகாம்.

நவீன மேலை மருத்துவம் சார்ந்த ஓர் அறிமுக வகுப்பு. அறுவைசிகிழ்ச்சை நிபுணரும், மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான டாக்டர் மாரிராஜ் நடத்துகிறார்.

ஒரு சாமானியனுக்கு உடற்கூறியல், நோய்கள், மருத்துவத்தின் அடிப்படை முறைகள் பற்றிய அறிமுகம் அளிக்கும் வகுப்பு இது. பொதுவெளியில் பணியாற்றும் எவரும் அறிந்திருக்கவேண்டியது. ஒருவரின் வாழ்க்கைநோக்கையே மாற்றியமைக்கும் பயிற்சி.

ஏப்ரல் 5,6 மற்றும் 7  

இந்திய தத்துவம் இரண்டாம்நிலை வகுப்புகள்

ஏப்ரல் 12, 13, 14 தேதிகள்

 

 

 

 

காட்சிக்கலைப் பயிற்சி

ஏ.வி.மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை, புகைப்படக்கலை அறிமுக வகுப்புகள் ஏப்ரல்   ஏப்ரல் 19 20 மற்றும் 21 தேதிகளில் ஈரோட்டை அடுத்த மலைத்தங்குமிடத்தில் நிகழும்.

வரவிருக்கும் வகுப்புகள்

ஏப்ரல் இறுதியில் விடுமுறை தொடங்குவதனா தொடர்ச்சியாக ஏப்ரல்  30 மற்றும் மே 1 நாட்களில் (இரண்டு நாட்கள்) மாணவர்களுக்கான ஒரு தனிப் பயிற்சியை நிகழ்த்தும் திட்டம் உண்டு.

கட்டுரை நூல்களை கூர்ந்து வாசிப்பதற்கும் தொகுத்துக் கொள்வதற்குமான பயிற்சி இது. இலக்கியவாசகர்கள், சிந்தனைத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கான பயிற்சி . கல்லூரி மாணவர்கள், போட்டித்தேர்வு எழுதுபவர்கள் ஆகியோருக்கும் உதவிகரமானது

இவ்வகுப்பை நான் இருமுறை முன்னர் மாணவர்களுக்காக எடுத்துள்ளேன். இந்தியாவிலும் வெளியிலும். இது கோட்பாடு- செய்முறை அடங்கியது

சைவத் திருமுறைகளின் மீதான வாசிப்புப் பயிற்சி வரும் மேமாதம் முதல்வாரம் 3,4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நிகழும்

 

மே மாதம்  7,8 தேதிகளில் (  செவ்வாய் புதன் இரண்டு நாட்கள்) இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு உதவும் கவனக்குவிப்பு- ஊழ்கப்பயிற்சி. தில்லை செந்தில் பிரபு.

மே 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் குரு சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி. இப்பயிற்சி இதுவரை யோகப்பயிற்சி பெற்ற அனைவரும் வந்துகூடுவதற்கானது. ஒரு பொதுக்கூடுகை மற்றும் பயிற்சி இது. அவர்களின் பயிற்சிநிலை, அதன் தொடர்ச்சி ஆகியவற்றை ஆசிரியர் பரிசீலிப்பார்

 

மே 24 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ஆண்டுதோறும் நிகழும் குருநித்யா  இலக்கிய விழா.

 

முந்தைய கட்டுரைதொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -3
அடுத்த கட்டுரைஒரு தனித்த புரவி