ஓர் அவசர வேண்டுகோள்

ஜெ,

வணக்கம்,

புவிக் கோளமெங்கும் 25 கோடி வீரர்கள் கால்பந்து விளையாடுகின்றார்கள். உலகில் கால்பந்து விளையாடாத நாடே இல்லை எனலாம். உலகிலேயே மிகப் பெருந்திரளான மக்கள் கண்டுகளிக்கும் விளையாட்டும் கால்பந்துதான். நேரிலும் தொலைக்காட்சியிலும் 260 கோடி மக்கள் கால்பந்து ஆட்டங்களைக் கண்டு சுவைப்பதாக பிரித்தானியக் கலைக் களஞ்சியம் சொல்கிறது. ஆனால் இந்தியாவும் தமிழ்நாடும் கால்பந்து விளையாட்டில் எங்கே நிற்கின்றன? சொல்லாத வரை நல்லது

இந்நிலையிலும் கால்பந்து விளையாட்டையே உயிர்மூச்சாகக் கொண்டு அதற்காகவே தம் வாழ்நாளை முழுமையாக வழங்கிக் கொண்டு உழைத்து வரும் ஒருசிலரும் இருக்கவே செய்கின்றனர். அந்தச் சிலரில் ஒருவர்தான் போத்தனூர் இராசகோபால்

கோவையிலும் போத்தனூரிலும் தமிழ்ப் பற்றும் கால்பந்து ஆர்வமும் மிக்கவர்களிடையே நன்கு அறிமுகமான ஒரு பெயர் பாபு () இராசகோபால். அவர் கால்பந்து விளையாட்டு வீரர் மட்டுமல்ல, கால்பந்துப் பயிற்சியாளரும் ஆவார். இளைஞர்கள், இளம்பெண்களிடையே சிறந்த பல கால்பந்து வீரர்களைச் செதுக்கியவர்

இராசகோபால் சொல்கிறார்

மாநில அளவிலான போட்டிகளில், அரசுப் பள்ளி மாணவிகளால் இறுதிப் போட்டியில் பங்கெடுக்க முடியாது என்றிருந்த நிலையை மாற்றி, ஏழ்மை  நிலைமையிலும்  கூட வாய்ப்பும், உரிய பயிற்சியும் கிடைத்தால்  அவர்களை  சாதிக்க வைக்க முடியும் என்று தமிழ்நாட்டளவில் அவர்களை இரண்டாம் இடத்திற்குக் கொண்டுவந்து சாதித்துக் காட்டியது என் கால்பந்துப் பயணத்தில் மிகவும் மகிழ்வான தருணம்.”

கால்பந்துப் பயிற்சியில் தமிழ் மாணவர்கள் பெரிதாய்ப் பயன்பெற வேண்டும்அதிலும் குறிப்பாக ஒடுக்குண்டு கிடக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும் என்பதில் இராசகோபாலுக்கு எப்போதுமே தனி அக்கறை! கால்பந்துப் பயிற்சியோடு நின்று விடாமல், தமிழுணர்வும் அரசியல் அறிவும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனபதே என் நோக்கம் என்பார். இந்த நோக்கம் இருந்தபடியால் பல முறை அரசு வேலைவாய்ப்பை உதறி விட்டவர், பாவாணர் பைந்தமிழ்ப் பாசறை நிறுவி தமிழ்த் தொண்டாற்றி வந்தார்

இராசகோபால் தமது பெரும்பணியைத் தொடர விடாமல் நோய் குறுக்கிட்டு விட்டது.

அவரின் இரு சிறுநீரகங்களும் பழுதாகி விட்டன. கடந்த நான்காண்டுகளாக வாரம் மூன்று முறை ஊடுபிரித்தல் (’டயலிசிஸ்’) செய்து கொண்டுதான் உயிர்வாழ்கிறார். இதனால் கடுமையான உடல் வேதனையோடு பெரும் பொருளியல் நெருக்கடிக்கும் ஆளாகித் துன்பத்தில் உழன்று வருகிறார். ஆனால் இப்போதும் எங்கிருந்தாலும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தொடர்ந்து கால்பந்துப் பயிற்சி அளித்துக் கொண்டுதான் இருக்கிறார். தமிழும் கால்பந்தும் இறுதிமூச்சு வரை என்பதில் உறுதியாக இருக்கிறார்

ஊடுபிரித்தலிலேயே நெடுநாள் பிழைத்திருக்க முடியாது என்பதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அவசரம் எழுந்துள்ளது

நல்ல உடல்நலத்துடன் இருக்கிற யாராவது ஒருவர் தமது இரு சிறுநீரகங்களில் ஒன்றைக் கொடையாகத் தர முன்வந்தால் மருத்துவ நோக்கில் மற்றப் பொருத்தங்களும் இருந்தால் அதனை எடுத்துப் பொருத்தலாம். உண்மையில் அப்படி ஒரு பெண் முன்வந்தார், ஆனால் குருதிப்பிரிவு ஒத்து வராமல் போயிற்று (இராசகோபாலின் குருதிப் பிரிவு A+). 

விபத்தில் அல்லது வேறு வழியில் மூளைச்சாவடைந்த ஒருவரின் சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்துதல். மாற்று சிறுநீரகத்துக்காகக் காத்திருப்போர் பட்டியல் ஒன்றுள்ளது. அந்தப் பட்டியலில் இராசகோபால் பெயரைப் பதிந்தாயிற்று. பட்டியலில் அவரது பெயர் மெல்ல நகர்ந்து சில மாதம் முன்பு 19, இப்போது 4 வரை வந்துள்ளது. கோவை கேஜி மருத்துவமனையில் எந்த நேரமும் அவர் அறுவை சிகிச்சைக்கு அழைக்கப்படலாம் என்ற நிலை. ஆனால்

ஆனால் தனியார் மருத்துவமனையில் இந்த சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான செலவு 20 இலட்சம் ஆகக் கூடும், இன்னுங்கூட மிகக் கூடும். எடுத்த எடுப்பிலேயே 10 இலட்சம் தேவை. இராசகோபால் உயிர்காப்பு நிதிக் குழு ஒன்று தோழர் தியாகு ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டு, நிதி சேர்க்கும் பணி நடந்து வருகிறது. எழுத்தாளர் சாம்ராஜின் கொடைமடம் நூல் வெளியீட்டுக்கு வந்திருந்த திரைப்பட இயக்குநர் மிஷ்கின் இலட்சம் ஒன்றும் ஊக்கம் பலவும் தந்துள்ளார். பல நண்பர்களும் உறுதியளித்துள்ளனர்

நற்றுணை கலந்துரையாடல் ஒரு சார்பாக  கட்டண வகுப்பு எடுத்தோம். தோழர் தியாகு இருநாட்கள் வகுப்பு எடுத்தார்அதன் வழியாக நாற்பதாயிரம் திரட்டி அளித்தோம். எப்படி இருந்தாலும் அது சிறு பங்களிப்பு மாத்தி்ரமேஅறுவை சிகிச்சைக்கான தொகை பெரிது என்பதாலும் அவர் எந்நேரமும் அழைக்கப் படலாம் என்பதாலும் துரிதமாக அதிகம் பேரிடம் இந்த கோரிக்கையைக் கொண்டு சேர்க்க எண்ணுகிறோம். இந்த மடல் தங்களின் தளத்தில் வந்தால்  நிதி சேகரிப்புக்கு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறோம். அவருக்கு பொருளுதவி செய்ய எண்ணுபவர்கள் கீழ்கண்ட வங்கி எண்ணிக்கை அல்லது தொலைபேசி எண்ணிற்கோ தங்கள் உதவித்தொகையை அனுப்பலாம்

இராசகோபாலுக்கு நம்மையும்,கால் பந்தையும் விட்டால் வேறு உறவில்லை

நன்றி வணக்கம்

வங்கி விவரம்:

Name: Rajagopal K S

Canara Bank

Account No: 110003936328

IFSC Code: CNRB0016566

UPI: rajagopalks@cnrb

தோழர் இராசகோபாலுடன் பேசவும் G-pay வழி பணம் அனுப்பவும்:  

அலைபேசி எண்;  70940 95098

அன்புடன்,

R.காளிப்ரஸாத்

முந்தைய கட்டுரைதலையில் பனை
அடுத்த கட்டுரைகாட்சிக்கலைப் பயிற்சி, ஏப்ரல்