கேரளமும் குடியும்- கடிதம்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்

குடியும் கோமாளிகளும்

ஜெ,

இந்த நிகழ்வு நடந்தபோது இதை எழுதவேண்டுமென தோன்றியது ஆனாலும் நானும் கடந்த காலத்தில் குடிப்பழக்கம் கொண்டவன் என்பதினால் எழுத தயக்கம் இருந்தது. மஞ்ஞும்மல் பாய்ஸ் குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் வாசித்த போது எழுதியே ஆக வேண்டும் என எழுதுகிறேன்.

எங்கள் நண்பர்கள் குழுவுடன் மாதங்கள் முன்பாக வால்பாறை சென்றிருந்தோம். வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி அங்கிருந்து சிநேகதீரம் பீச் சென்று கோவை வழி திரும்புவதாக திட்டம். மூன்று பைக்குகள் இரட்டை  இரட்டையாக ஆறு நபர்கள் நாங்கள். நல்ல மழை. வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் பாதை கனவு காண்பதை போன்றது. அங்கு எங்களுக்கு முன்னால் சென்ற கேரள டிராவலர் ஒன்று பத்து நபர்கள் இருந்திருப்பார்கள். மலையாளப் பாடல் சத்தமாக ஒலித்தது. எங்கள் குழுவில் ஒரு பைக் முன்னாள் சென்றது ஒரு பைக் எங்களுக்கும் பின்னால் நடுவே நான் என் நண்பரிடம் பைத்தியம் போல் மரம் மழை கவிதை காடு என பேசிக்கொண்டு சிரித்தபடி.

குறைவான நேரத்தில் அந்த டிராவலர் எங்கள் முன் உலட்டியபடி நின்றிருந்தது அதற்கு அப்பால் நண்பரின் பைக் சாலையின் குறுக்கே. கூச்சலிட்டபடி என் நண்பர்களில் ஒருவர் ஜன்னலினூடே எம்பி எம்பி கைமுறுக்கி குத்திக்கொண்டிருந்தார். எனக்கு விளங்கவில்லை. ஓடிச்சென்று தடுத்து கேட்டபோது . அவர் பதறியபடிதாயோழி ஓவர் டேக் எடுக்குறான் னு ஸ்லோ பன்றன் பீர் பாட்டல வீசிட்டு போறான்டஎன பாட்டிலை காட்டினார் . பாட்டில் சாலையின் ஓரத்தில் உடைந்து சிதறி கிடந்தது. அதை பார்த்தவுடன் எனக்கு  “திக்என்றது. ‘மண்டைக்கு மேல போய் உழுவுதுஎன பதறியபடி நின்றார்.

என்னால் அவரின் பயத்தை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அங்கு நடந்த களேபரத்தில் எனக்கு உடன்பாடில்லை. இவர் பாட்டுக்கு சீறுகிறார் நாங்கள் ஆறு பேர் அவர்கள் பத்திற்கும் மேல். அதே வாகனத்தில் குடிக்காமலும் சிலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கண் கலங்கியபடிச்சேட்டா ஒன்னு கொழப்பில்லா ஞான் சாரி பறையுதுஎன கைகளை பிடித்து மன்றாட சூழ்நிலை கனிந்து அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். நானும் கூட அந்த உடைந்த பாட்டிலை அங்கிருந்து எடுக்காமல் வந்ததை நினைத்து இப்போது வருந்துகிறேன்

பின்பு அதையும் விட ஒரு பெரிய நிகழ்வு இதுவும் அதே நண்பருக்கு, வெள்ளைநிற ஸ்விப்ட் காரில் நான்கு மலையாள இளைஞர்கள் ஓட்டியவன் உட்பட அனைவரும் கஞ்சாவின் மயக்கத்தில். கார் எங்களை கடந்த போது நெடி வீசியது. நானும் சக நண்பரும்எங்க விழுந்து சாகப்போறனுகளோஎன பேசிக்கொண்டோம். இம்முறையும் அதே போல் தான் எங்களுக்கு முன்பாக அதே நண்பர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் . இம்முறை வாகனத்தை உரசிவிட்டிருக்கிறார்கள் மோதியிருந்தால் கொண்டைஊசி வளைவு, கீழே பள்ளம்.

சமூகவலைத்தளங்களில், சினிமாக்களில், திருமண விழாக்களிலும் கூட இவர்கள் இங்கு போதை பழக்கங்களை glorify செய்து normalize ஆக்குகிறார்கள். உண்மையிலேயே இப்போதெல்லாம் அவர்களை நினைக்கயில் பரிதாபமாக தான் உள்ளதே தவிர அதில் கோபம் ஒன்றுமில்லை. மதுப்பழக்கம் கொண்டிருக்கும் நண்பர்களிடம் பெரிதும் நான் எதுவும் கூறுவதில்லை குடி குடிக்காதே என்றெல்லாம், இவற்றை குறித்தெல்லாம் ஆவேசமாக ஏதேனும் பேசினால் என் கடந்த காலத்தை வைத்து எனை சிறுமை செய்ய முயல்வார்கள் மட்டுமில்லாமல் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர அவரவர்களே முயன்றாலொழிய மீட்பில்லை. உதவிகள் கிடைக்கலாம். எனக்கு இலக்கியம் அமைந்தது

இந்த நிகழ்வுகள் என் நண்பர்களை பெரிதும் ஒன்றும் செய்யவில்லை அவர்களுக்கும் தங்கள் வன்முறையை கட்டவிழ்த்துக்கொள்ள ஓரிடம் கிடைத்தது அவ்வளவுதான். அதன்பின் மலை ஊர்களுக்கு செல்வதில் சிறிதே தயக்கம் உள்ளது

வருடங்கள் முன்னதாக கொல்லிமலை சென்றதை நினைத்து பார்க்கிறேன். அப்போது ஒரு அருவியின் பக்கம் பாறையினால் ஆன பெரிய பரப்பு அங்கு முழுவதும் பாட்டில்கள் உடைந்து கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தது இன்னமும் என்னுள் ஒருவித எரிச்சலாகவே உள்ளது. இவர்கள் குடியை நிறுத்துகிறார்களோ இல்லையோயானை டாக்டர்வாசித்திருந்தால், சூழல் மீது அக்கறை கொண்ட மனிதராக இருந்தால் குறைந்தபட்சம் பாட்டில்களை காடுகளில் எறியும் போது சிந்திப்பார்கள். தோழி ஒருவர் புகைப்படம் ஒன்றினை அனுப்பினார். சமகாலத்தில் தொடர்ச்சியாக தளத்தினை வாசிப்பவர். ‘இங்க பாருங்களே அவர் என்ன எழுதி இருந்தாரு இவங்க எப்புடி போட்டுறுக்காங்கனுசலித்துக்கொண்டர். போதை பழங்கங்களை gorify செய்து தங்களை சினிமா நாயகன் போல் காட்டிக்கொள்பவர்கள் குறித்து நாங்கள் இருவருமே பரிதாபமாக சிரித்தபடி உரையாடினோம்

ஆசிரியருக்கு நன்றி!

அன்புடன்,

பொன் சக்திவேல்.

 

மஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம்

முந்தைய கட்டுரைபனை, கடிதம் – காட்சன் சாமுவேல்
அடுத்த கட்டுரைசூனார்