எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராஜாவின் படைப்புகள் குறித்த ‘நற்றுணை கலந்துரையாடல்‘ அமர்வு வரும் 16-03-2024 சனிக்கிழமை மதியம் 02:00 மணிமுதல் நிகழவுள்ளது.
இந்நிகழ்வு சென்ற டிசம்பரில் ஒருங்கிணைக்கப் பட்டு கனமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. பின் சென்னைப் புத்தக கண்காட்சி மற்றும் மாவட்டந்தோறும் நிகழ்ந்த புத்தக விழாக்கள் நிறைவடையும் வரை காத்திருந்தோம். காத்தி்ருந்து ஒத்துழைப்பு நல்கிய எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்க்கு நன்றி..
10 நாவல்கள் 6 சிறுகதைத் தொகுப்புகள் 4 கட்டுரைத் தொகுப்புகள் என பரந்து விரிந்த கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் குறித்து உரையாட அனைவரையும் அழைக்கிறோம்!!!
அனைவரும் வருக!!