தொடக்கத்தின் விசையில்..

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

வாசிப்பை நேசிப்போம் 

புதுமையான ஒரு வாசிப்பு அனுபவம். அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்வாக விருப்பமுடன் நடைபெறும் செயல். ஓரிரு நாள் வாசிப்பு முன்பின் நிகழ்ந்தாலும் முடிவில் சரியான இலக்கை எய்தி விட்ட பெருமிதமும் திருப்தியும் என்னுள் சிறகடிக்கின்றன.

விசால பார்வை நோக்குடைய நம் வாசிப்பு குழுவிற்கு நன்றிகள்.

வேள்வி முகமாக வேசரதேசத்தில் மானசா தேவியோடும் ஆஸ்திகனோடும் தொடங்கும் கதைக் களம் உலகத்தின் தொடக்கத்தை நாகங்களுடனும் இருள் என்ற கதாபாத்திர பினைப்போடும் நகர்த்தி செல்கிறது.

தன் தந்தை ஜகத்காரு முனிவரை அன்னையிடம் இருந்து அறிகிறான் ஆஸ்திகன். பிறப்பின் நோக்கம் அடைய பயணம் மேற் கொள்கிறான்.

270 நாட்களுக்கு பின் அஸ்தினாபுரம் அடைந்து வேள்வியில் கலந்து கொள்கிறான்.

அங்கு அஸ்தினாபுரம் மன்னர்களின் வரலாறை கிளை கதைகள் மூலம் ஆசிரியர் விவரிக்கிறார்.அப்போதைய மன்னன் ஜனமேஜயன் உத்தங்கர் மூலம் தன் குல வரலாறு அறிகிறான்.

ஜனமெஜயன் நாகங்களை அழிக்க நடத்தும் வேள்வியில் ஆஸ்திகனால் காப்பாற்றப்படும் நாகங்கள். அங்கே தெரிந்துகொள்ள செய்கிறார் மகா வியாசரின் வருகையும் வரலாறும்.

மச்ச கந்தி அதரிகை மகனார் வியாசர்.

பேரரசன் ஹஸ்தி துவங்கி மன்னன் சாந்தனு மற்றும் அவனது மைந்தர்கள் சித்தராங்கதன் , விசித்திர வீரியனை அறிமுகம் செய்கிறார். சாந்தனு மறைவிற்கு பின் மணம் புரிந்து ஆட்சியில் அமர்ந்த சிதராங்கதன் நீருக்குள் மறைந்து துறப்பது. பிறந்த நாள் முதலாக வைத்திய சாலையிலேயே காலம் கடத்திய விசித்திர வீரியன் உண்மையில் விசித்திர மான வாழ்கை தான் வாழ்ந்திருக்கிறார். இடையிடையே நிகழும் மச்சகண்ணிகளின் கதைகளும் காதல் ரசம் சொட்ட திகைக்க வைக்கிறார் ஆசிரியர்.

விசித்திர வீரியணை அரியணை ஏற்றவும் மணம் புரிந்து வைக்கவும் தீவிரம் காட்டும் அரசி சத்தியவதி. பீஷ்மரை கொண்டு கவர்ந்துவரப்படும் மணப்பெண்கள் அம்பை ,அம்பிகை,அம்பாலிகை. நியாயம் பேசி திரும்பி செல்லும் அம்பை மாபெரும் கணல் கக்கும் கொற்றவை காளி போன்று அவதாரம் எடுத்து தன் ஏமாற்றதுக்கு காரணமான பீஷ்மரை பழி வாங்க தன் வெம்மையில் பெற்றெடுத்த மகவான சிகண்டி என மனதில் நிற்கும் அத்தனை கதாபாத்திரங்கள் தினசரி வாசிப்பில் நம்மை ஈர்க்கின்றன.

பீஷ்மரை பழி வாங்க அனைத்து வித்தைகளும் கற்று தேரும் சிகண்டி இறுதியில் பீஷ்மரை சந்தித்து அவரென்று அறியாமல் அவரிடமே வித்தை கட்ருக்கொள்ளுதல். தன்னை கொள்ளும் நோக்கோடு வந்தமை அறிந்தே கற்றுக் கொடுக்கும் பீஷ்மர் உயர்ந்து நிற்கிறார்.

முதலும் முடிவும் ஆக ஆஸ்திகனின் நாடு திரும்பும் படலமும் கொண்டு முடிவு அடைகிறது முதற்கனல்.

மழைப் பாடலை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

நன்றி.

ப்ரவீணா பாண்டியன்

வாசிப்பை நேசிப்போம் 

 

முந்தைய கட்டுரைநற்றுணை கலந்துரையாடல், சென்னை,கீரனூர் ஜாகீர்ராஜா
அடுத்த கட்டுரைவெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு