கனல்நுழைவு

 

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

இந்நூலைப் படித்து முடித்து விட்டு வியப்புடன் அமர்ந்திருக்கிறேன். எத்துணை கதை மாந்தர்கள் (சத்தியவதி, சந்தனு, வீசுமர்/வீட்டுமர்/Bhishmar, அம்பை, விசித்திர வீரியன், அம்பிகை, வியாசன், சிகண்டி); எத்துணை இடங்கள் (பாலை, ஆறு, மலை, பாதாளம், சிபி நாடு (Pakistan), திருவிட நாடு (திராவிடம்); எத்துணை உரையாடல்கள்; இயற்கைக் காட்சி விவரிப்புகள், தத்துவ விளக்கங்கள். படித்து முடிக்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன (பெரும்பாலும் இரவில் படித்தது). இதனை எழுத இவருக்கு எவ்வளவு நேரமானதோ !

இயற்கை, தத்துவ விளக்கங்களை விட கதை மாந்தர்களுக்கு இடையான உரையாடல்களே என்னை அதிகம் ஈர்த்தன. வீட்டுமர்-அம்பை, வீட்டுமர்-சத்தியவதி, வீட்டுமர் – சிகண்டி என்று பல உரையாடல்களும் வீட்டுமர் குறித்தே இருந்தாலும், என் (romantic) மனதுக்குப் பிடித்தமாக இருந்தது விசித்திரவீர��யன் – அம்பிகை உரையாடல்களே.

சிறுவர்களுக்கான மகாபாரதம் இரண்டு மூன்று தொகுப்புகள் படித்து இருக்கிறேன். இராமாயணத்தை விட மகாபாரதத்தையே அதிகம் விரும்பி இருக்கிறேன். நூறு முறை கேட்ட, பார்த்த, படித்த கதையாக இருந்தாலும், சலிப்பு தட்டாமல் 600+ பக்கங்களையும் படிக���க முடிந்தது. எடுத்தால் வைக்கவே மனமில்லை.

நிறைய அழகிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். நானே ஒரு https://gist.github.com/psankar/ecc63… திரட்டு தயாரித்தேன். ஆனால் நூலின் முடிவில் அவரே பொருள்கொடுத்திருக்கிறார்.

இந்நூலை இடதுசாரிகள் கொண்டாடாதது ஏன் என்று புரிகிறது. ஆனால் வலதுசாரிகளும் ஏன் கொண்டாடவில்லை என்று ஓரளவு புரிந்தது. சாதி / வர்ண எதிர்ப்பு கருத்துகள் வருகின்றன. கிண்டலாக, நகைச்சுவையாக, கோபமாக என்று பல உணர்வுகளுடன். கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக பாராட்டி நாலுவரி எழுதி இருப்பார் என்று பட்டது. தமிழ்வளர்ச்சித் துறை பார்த்து ஏதும் செய்யலாம்.

என் அறிவை அதிகரிக்க நான் FOSS மென்பொருட்கள் ஆக்குவேன். அதில் நான் என் வேலையை விட அதிக ஆர்வமாக உழைப்பேன். இந்நூலை ஆசிரியர் இலவசமாக இணையத்தில் வெளியிட்டாலும், அசுரத்தனமாக உழைத்து இருக்கிறார். ஒரு தனிமனிதனால் எப்படி இவ்வளவு எழுதிக் குவிக்க முடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. தெரிந்த கதைதான் என்றாலும் ஆர்வம் குன்றாமல் எழுத வேண்டுமே.

விலை கொடுத்து வாங்கியதற்கு மிக நிறைவான நூல். அடுத்த பாகத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.

நூல் அறிமுகம் செய்து வைத்த நண்பர் நந்தாவுக்கு நன்றி.

Good Reads MuthaRkanal

சங்கர்

முந்தைய கட்டுரைகல்விச்சூறையாடல்
அடுத்த கட்டுரைஓர் இலக்கியம் முளைத்தெழுதல் – கடிதம்