இரண்டாம்நிலை தத்துவ வகுப்புகள்

இரண்டாம்நிலை இந்திய தத்துவ வகுப்புகள் ஏப்ரல் 12,13 மற்றும் 14 அன்று நிகழவுள்ளன. முதல்நிலை தத்துவ வகுப்புகள் முடித்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். இரண்டாம்நிலை தத்துவ வகுப்புகளை மீண்டும் ஒருமுறை பயில விரும்புபவர்களும் கலந்துகொள்ளலாம்

தொடர்புக்கு

ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம் [email protected]

முந்தைய நிகழ்வு

 

 

நவீன மேலை மருத்துவம் சார்ந்த ஓர் அறிமுக வகுப்பு. பொது மருத்துவ நிபுணரும், மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான டாக்டர் மாரிராஜ் நடத்துகிறார்.

ஒரு சாமானியனுக்கு உடற்கூறியல், நோய்கள், மருத்துவத்தின் அடிப்படை முறைகள் பற்றிய அறிமுகம் அளிக்கும் வகுப்பு இது. பொதுவெளியில் பணியாற்றும் எவரும் அறிந்திருக்கவேண்டியது. ஒருவரின் வாழ்க்கைநோக்கையே மாற்றியமைக்கும் பயிற்சி.

ஏப்ரல் 5,6 மற்றும் 7 ஆம் தேதிகளில் (வெள்ளி சனி ஞாயிறு)

நவீன மருத்துவம், அறிமுக முகாம்.

வரவிருக்கும் நிகழ்வுகள்

 

ஏ.வி.மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை, புகைப்படக்கலை அறிமுகம் ஏப்ரல் 19 20 மற்றும் 21.

நவீன ஓவியக்கலை நிபுணரான ஏ.வி.மணிகண்டன் நவீன ஓவியங்களை புரிந்துகொள்வது, புகைப்படக்கலையை ரசிப்பது பற்றிய வகுப்பை நிகழ்த்துகிறார். இன்றைய கட்டிடக்கலை, பேஷன் டிசைனிங் உள்ளிட்ட பலதுறைகளை புரிந்துகொள்வதற்கான அடிப்படை வகுப்பு இது

இந்திய தத்துவம் மூன்றாம்நிலை வகுப்புகள்

இந்திய தத்துவத்தின் மூன்றாம்நிலை வகுப்புகளின் இரண்டாவது அணி ஏப்ரல்  26 27 28 ஆம் தேதிகளில் நிகழும்

முந்தைய கட்டுரைநூறிருப்பு
அடுத்த கட்டுரைவெண்முரசை ஏன் வாசிக்கவேண்டும்? நிர்மல்