ஆத்மாவை நிரூபிக்க அரியவழி!
ஆசிரியருக்கு.
இதைவிட நகைச்சுவையாக ஆத்மாவை நிரூபிக்க முடியாது.இன்னும் சிரிப்பு அடங்கவில்லை.உடனே உங்களுக்கு எழுதுதினால்தான் என் ஆத்மா சாந்தியடையும்.பிரம்மஸ்ரீக்களும்,கீதாச்சாரங்களும் மலிந்து,நலிந்த காலம் இது.பெயர் குறிப்பிட முடியாத சில ஹை டெக் பிரம்மஸ்ரீக்களையும்,லோக்கல் சித்தவித்தைகாரரர்களையும் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.இன்றைய ஆன்மீகம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதை உங்கள் கட்டுரை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.சிலரிடம் மாட்டி தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றுஓடி,ஆடி இல்லறத்தில் அமர்ந்திருக்கும் ஒரு முதுமையை எட்டத்தொடங்கிய சாதாரண இல்லறவாசி நான்.
அந்த ஆத்மாவை மட்டும் கொஞ்சம் நிரூபிக்க மறந்துடதீங்க .சார்
வாசகன்.
தா.சிதம்பரம்.தோவாளை.
அன்புள்ள ஜெ
நலமா?
ஆத்மாவை நிரூபித்த கட்டுரை வாசித்தேன். உண்மையில் ஒரு கச்சிதமான சிறுகதை. நையாண்டி, தத்துவார்த்தமான ஆழம் எல்லாம் உள்ள கதை. இல்லாததை உண்டு என நிரூபிக்கமுடியும், ஏனென்றால் அதை இல்லை என நிரூபிப்பது கடினம்.
உங்களுடைய தத்துவப் பயிற்சிதான் இத்தகைய கதைகளை நுட்பமான நையாண்டியுடன் எழுத உதவுகிறதென நினைக்கிறேன். பொம்மனாட்டி டிரெஸ் மாத்தும் இடத்தை வாசித்ததும் ஓசையிட்டுச் சிரித்துவிட்டேன்
சரவணன் குமாரசாமி