சுபமங்களா வலுவான நிறுவனப்பின்புலத்துடன் வெளிவந்த இதழ். தமிழிலக்கியத்தில் அழுத்தமான தாக்கத்தை உருவாக்கி ஒரு திருப்புமுனையாக அமைய அதனால் இயன்றது. பின்னர் வெளிவந்த காலச்சுவடு, உயிர்மை போன்ற பல வெற்றிகரமான இலக்கிய இதழ்களுக்கு முன்னோடியாக இருந்தது சுபமங்களா. தமிழ் நவீன இலக்கிய இயக்கம் பரவலான கவனிப்பைப் பெற்று ஒரு பொதுமக்கள் இயக்கமாக ஆனதற்கு வழிகோலிய முன்னோடி இதழாக, ஓர் இலக்கிய இயக்கமாகவே சுபமங்களா மதிப்பிடப்படுகிறது.