பஷீர் காணொளி

அன்புள்ள ஜெ

வைக்கம் முகமதுபஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளையின் பேட்டி, காணொளி

எஸ்.ராம லக்‌ஷ்மணன்

பஷீரும் தகழியும் நன்றாகவே முதிர்ந்து கனிந்திருக்கிறார்கள். கடைசிக்காலத்து பதிவுகள். அவர்கள் இருவரின் வேறுபட்ட உடல்மொழிகளைப் பார்ப்பது இனிய அனுபவமாக இருக்கிறது. தகழி அந்த கடைசிநாவலை எழுதவேயில்லை

ஜெ

[பஷீர் : சின்னவயசிலே பயில்வான் ஆகவேண்டுமென ஆசைப்பட்டேன். பின்னர் எழுத்தாளனாகவேண்டுமென்று. அதற்குக் காரணமுண்டு. வைக்கத்தில் என் வீட்டுக்கு முன்னால்தான் வைக்கத்து அஷ்டமி விழா நடக்கும். பெரும்கூட்டம் வரும். என் வீட்டு வாசல்படியில் புத்தகங்களை போட்டு விற்பார்கள். விற்பனையாளன் எனக்கு நாவல்களை எடுத்து தந்து படிக்கச்சொல்வான். நான் இரவெல்லாம் விழித்திருந்து படிப்பேன். அப்படித்தான் ஆர்வம் வந்தது]

[தகழி சிவசங்கரப்பிள்ளையிடம் எம்.டி வாசுதேவன் நாயர் கேட்கிறார். ‘ ரஜ்ஜம்மாவான், எழுதவேண்டுமென மனதில் மிச்சம் உள்ள திட்டங்கள் என்னென்ன?’ தகழி சொல்கிறார். ‘ நிறைய எழுதுவதற்கு இருக்கிறது. இருந்தாலும் இப்போது முக்கியமாக தோன்றுவது சிந்துநதிக்கரை நாகரீகத்தின் ஒரு சாதாரண வாழ்க்கைச்சூழலை கற்பனைசெய்து ஒரு நாவல் எழுதும் திட்டம்…அதுதான் மனதில் தெளிந்து நிற்கிறது].

httpv://www.youtube.com/watch?v=Cj7DqtnGbIE

httpv://www.youtube.com/watch?v=zMAkGaahQzQ