தமிழில் நாடகங்களின் பேசுபொருட்களை மாற்றியவர்களில் கிருஷ்ணசாமி பாவலர் முக்கியமானவர். புராண, இதிகாச, காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டே நாடகங்கள் நடிக்கப்பட்டு வந்தன. அரசியல், சமூக நடைமுறை, பண்பாடு, சீர்திருத்தம் என உள்ளடக்கங்களைக் கொண்ட நாடகங்களின் தேவையை உணர்ந்து அவற்றை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். காந்தியம் தொடர்பான நாடகங்களை உருவாக்கியதும், மது விலக்கு, கதர்ப் பிரச்சாரம், தேச விடுதலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை அமைத்ததும் தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.
தமிழ் விக்கி தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்