வேதமூர்த்தி பிள்ளை வீணையைப் போல நாதஸ்வரத்தில் வாசிக்கும் திறமை பெற்றிருந்தவர். ஆரம்பகாலத்தில் அவருடைய நாதஸ்வர ஒலி இனிமையில்லாது இருந்தது. வெகுகாலம் இது குறித்து சிந்தித்து, அதுவரை யாரும் முயற்சி செய்திராத வகையில், நாதஸ்வரத்தின் உட்பகுதியில் ஒரு மெல்லிய உலோகக் குழாயைப் பொருத்தி இசைத்துப்பார்த்தார். அது முதல் வேதமூர்த்தி பிள்ளையின் நாதஸ்வர இசை வீணையைப் போல இனிமையாக ஒலித்தது. வேதமூர்த்தி பிள்ளையுடன் இணைந்து வாசித்து வந்த வேதாரண்யம் ஸோமாஸ்கந்த பிள்ளையும் ரங்கஸ்வாமி பிள்ளையும் இது போல் உலோகக் குழாய் பொருத்திய நாதஸ்வரத்தைப் பயன்படுத்தினார்கள்.
தமிழ் விக்கி வேதாரண்யம் வேதமூர்த்திப் பிள்ளை