அகப்பயிற்சி- கடிதம்

அன்பாா்ந்த ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு

 ஜனவரி 5,6,7 தேதிகளில் வெள்ளிமடையில் குருஜி தில்லை  செந்தில் அவர்களின் வழிநடத்தலில் நடந்த தியான முகாம் பங்கேற்ற பிறகு உலகம் இன்னும் அழகாகி விட்டதாக மலர்ந்த என் அனுபவத்தை எழுதுகிறேன்

முதலில் எல்லோருக்கும் ஒரு கேள்வி எழலாம். இந்த வயதில் (75) இம்முயற்சி  தேவையா என்று.உண்மை  கூற வேண்டும் என்றால்நாள் ஆக ஆக ஒரு  Zombie போல் ஏதோ எனக்கு நினைவில் இருப்பவைகளை   மாணவர்களுக்கு எாிச்சலும் கோபமுமாக சொல்லிக் கொடுப்பதுஜெ யை படித்து விட்டு இன்னும் பதறுவது என்ற போய்க் கொண்டிருந்த   பொழுது  உங்களுடைய இரண்டு பதிவுகள் என்னை எழுப்பி விட்டது. ஒன்று  உங்களுடைய  61 ஆம் பிறந்த  நாள் அன்று வந்தது என்று நினைக்கிறேன். இறுதிவரை ஒரு சோா்வும் இல்லாமல் அறிவுசார் செயல்களில் நான் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று உங்கள் உறுதியை கூறினீர்கள். இரண்டாவது பதிவுநீங்கள் என்றாவது உங்களைப் பற்றி உன் உள் மனதுஉன்னுடைய தொடர்பு இந்த பிரபஞ்சத்துடன் என்று யாராவது யோசிக்கிறீா்களா?   உங்களை அவதானிக்க ஏன் பயப்படுகிறீா்கள் என்று கேட்டீா்கள்சம்மட்டி போல் உங்கள் வார்த்தைகள் தாக்கிய  பொழுது இந்த ஜடத்தன்மையிலிருந்து நிச்சயம் விடுதலை வேண்டும் என்று தியானத்தை நோக்கி  நகர்ந்தேன்.

இந்த முகாமிற்கு வருவதற்கு முன் தனியாகப் போவது சிறிது பயமாக இருந்த பொழுது குருஜியை அணுகினேன்.   இணையத்திலோ அல்லது கோயம்புத்தூரில்  உள்ள நிலையத்திலோ கற்க முடியுமா என்று கேட்ட பொழுதுஒரு நொடியும் தாமதிக்காமல் நண்பர்கள் யாரும் சேரவில்லை என்றால் என்னுடன் வரலாம் என்று உடனே கனிவுடன் கூறினா்மிகவும் வியப்பாக இருந்தது இப்படி எளிமையாக சொல்கிறார் என்று. நல்லவேளையாக. கோயம்புத்தூரிலிருந்து என்னுடைய நண்பர்  ஆனந்தன் ( அவரும் நானும் இந்திய வேளாண்  ஆராய்ச்சி நிலைத்தில் ஒன்றாக வேலை  செய்திருக்கிறோம் .ஆனால் போனில் முதலில் தெரியவில்லைநண்பரை இத்தனை வருடங்கள் கழித்து பார்த்தது  ஒரு ஆனந்தம்.) போகும் வழி எல்லாம் ஒவ்வொரு கதையும்ஜெயிலிருந்து அசோகமித்திரன்  ,  தி.ஜா,  புதுமைப்பித்தன்  என்று எல்லா முத்துக்களையும் கோர்த்து  மகிழ்ந்து கொண்டே அந்தியூர் வந்து  சோ்ந்தோம் . அங்கு நண்பா் இராமமூா்த்தி வந்து சேர்ந்து கொண்டாா்வெள்ளிமடை வந்ததும் சொந்த ஊருக்கு வந்தது போல அமைதி. மணி  அண்ணாவின் அணைப்பு. இரவு உண்ணும் பொழுது நம்ப முடியாத இளமையுடன் சிாித்த குருஜிஅவருக்கு  உதவ  வந்த கடந்த வெள்ளி மலை வகுப்புகளில் பங்கேற்ற தன்னார்வலர்கள் (செல்வா , ரவி, குணா,மோகன்ராஜ்எல்லாரையும் சந்தித்தேன். எட்டரை மணிக்கு  வந்த தோழி சித்ரபிரபாவிடம் சிறிது அளவளாவி,  விட்டு நன்கு  உறங்கிவிட்டேன் .  பின்னர் வெகுநேரம்  பிரபா பூச்சிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்

காலை ஆறுமணி இருக்கும். எழுந்து வெளியில் வந்து அமா்ந்து முடுபனியும் காற்றும் ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது மேக பனி  மூட்டத்திலிருந்து ஒரு பாட்டு  மிக மெல்லஆனால்  தெளிவாக  உருகி உருகி ஒலித்தது . இந்த காலை வேளையில் யாா் இப்படி என்று பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த மலைச்சாிவு மேக மூட்டங்கள் நடுவே ஒரு தேவதூனைப் போல பாடிக் கொண்டே வந்த மணி அன்ணா. அவர் என்னைக் கவனிக்க வில்லை அவரும் அவர் பாட்டோடு இறையருளோடு  ஒன்றி கலந்து  அனுபூதி நிலையில் செல்வதை கூப்பிட்டு நிறுத்தும் மனது இல்லைஅந்த சில்ஹவுட்ட்  சித்திரம் ,  என்னவோ செய்ததுபாவம் ஏதோ ஒரு pump or UPS  வேலை செய்கிறதா  என்று  பார்த்து விட்டு வந்திருப்பார் . 40 பேருடைய வாழ்வும் அவரது அணைப்பில்தான் இருக்கிறது என்று நினைத்த பொழுதுஇது போல் அா்ப்பணிப்போடு ஒரு கர்ம யோகியாக நானும் மாறணும் என்று நினைத்துக் கொண்டேன்.

எப்பொழுதும் போல் புத்தரையும்   தேவியையும்    பிரார்த்தனை  செய்த பிறகு வகுப்பு துவங்கியது முதல் வகுப்பில்யோகா என்றால் என்ன , யோகாசனத்திற்கும்        தியானத்திற்கும் உள்ள வேற்றுமைகளை குருஜி  விளக்கினார். புறத்தில் நடக்கும் செயல்களை உணர   இருக்கும் ஐம்புலன்கள்அதனை உள்ளடக்குதல் (பிரத்யாகாரம்). மையப்படுத்தல் தியானம்நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும்  உயிா் சக்தி பிரானா என்று  எல்லாவற்றையும் மிகவும் பொறுமையாக விளக்கினார்மிருகத்திலிருந்து  மனிதன்   வேறுபடுவது விழிப்புணர்வு ஒன்றினால் தான். மனம்பல உணர்வுகள் அனுபவங்கள் , நிலைகள் கொண்ட பெருவெளி என்றல் விழிப்புணர்வு  என்பது நம் கையில் உள்ள தீபம் போல ,மனிதன் எந்த வெளியில் நாம் செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தி செல்லும் என்றார் .  

இதை நாங்கள் நன்கு புாிந்து கொள்ள பல எடுத்துக்காட்டுகள் கூறிக் கொண்டே சென்றார் .  எனக்கு மிகவும் பிடித்தும் எளிதானதும் ஆனதுமனம் ஒரு பொிய மாளிகை என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதில் பல அறைகள் இருக்கின்றன. ஓரொரு அறையிலும்   பயம்வெறுப்புகோபம்சலிப்பு என்று இருந்தாலும் நம் விழிப்புணர்வு கொண்டு எந்த அறையிலிருந்து நாம்  விடுபடுவது  மிகவும்  தேவை என்று உணர்ந்து அதிலிருந்து வெளி வர வேண்டும் என்றார் மனதுக்கும் விழிப்புணர்வுக்கும் உள்ள வேறுபாடு புாிந்தால்  ( Mind versus Awareness நமது உணர்ச்சிகளை அதன் பிரவாகத்தை கட்டுப்படுத்தலாம் (emotional)  ஏனெனில்  இந்த வெளிப்பாடுகளில் நம் உயிர் சக்தி(ப்ரானா ) செலவாகிறதுஒரு தெளிந்த ஒடைப்போலமனம்விழிப்புணர்வுப்ரானா , உணர்ச்சிகள் நான்கையும்  இணைத்து  இருந்தால் நம் செயல்பாடுகளை   மேம்படுத்த முடியும் என்று விளக்கினார் குருஜி. அவர்  நல்ல உளவியாலாளராகவும் இருக்க வேண்டும். சின்ன சின்ன உதாரணங்களை சொல்லி நம்மிடமிருந்தே விடை வர வழைக்கிறர்.

 அதற்கு பிறகு எல்லோரையும் அறிமுகப்படுத்திக்  கொள்ள சொன்னா். அதிக சதவீதம் வந்திருந்தவா்கள் கூறியது  கவனமின்மையும் ஞாபக மறதியும் தான் . இதை நிச்சயமாக கையாள முடியும் என்றார்  அதற்கான கருவிகள் இவைதான்முதலில்  (1) முன் முடிவுகளோடு எதையும் அணுகாதீா்கள்(2) எது செய்தாலும் மிக மிக சிறிய  விஷயமாக இருந்தாலும் (பல் தேய்ப்பதை உதாரணமாக கூறினா்) நண்பா்களிடம்  பேசினாலும் அவருக்கு/ அவைகளுக்கு முழு  கவனிப்பு கொடுங்கள்.  (3) பல வேலைகளை செய்கிறேன் என்று எல்லாவற்றையும் சொதப்பாமல்  திட்டமிடுங்கள். இந்த வேலையை இந்த மணிக்குள் செய்து முடித்து விட்டு அடுத்த வேலை என்று வரையறுக்க கற்றுக் கொள்ளுங்கள் (multitasking/ multiple tasking). நினைத்துப் பாா்க்கும் பொழுது இந்த மூன்று தவறுகளையும் நான் செய்து கொண்டிருந்தேன்இனி நான்  திருத்திக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்  

 மாலை வகுப்புதியான முறைகளை கற்றுத்தந்தாா்தோழி சித்ரா கிருஷ்ணன் கூறியது போல் ,இந்த பயிற்சி வகுப்பை மிக அழகாக கட்டமைத்திருந்தார் . முதலில் தெய்வீக மணம் கமழும் அரங்கம்ஹம்சத்வனி அல்லது சிந்துபைரவியில் பண்டிட் சொளராசியாவின் குழலிசை , யோகா பயிற்சியின் வரிசைகள்,   எல்லாம்   கச்சிதமாகஅமைக்கப்பட்ட பயிற்சி .எப்பொழுது கேளிக்கையாக இருப்பது எப்பொழுது விதிகளை  மீறாமல் அடக்குவது என்று கண்டிப்பான ஆசிரியராகவும் இருந்தார்நான் கவனித்ததுஒரு  தியான பயிற்சி  செய்யும் பொழுதுஎந்த உறுப்புகளின் செயல் பாட்டினை  மேம்படுத்தும்என்ன பயன் கிடைக்கும் என்று சொன்னாரே  தவிர அது செய்யும் பொழுது உடல் நிலையில் என்ன எதிா்பாா்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு பயிற்சி முடிந்ததும் என்ன நடந்தது என்று கேட்கும் பொழுது நண்பர்கள் தாங்கள் உணர்ந்த  அதிர்வுகள்/ சிறு மாற்றங்கள் பகிர்ந்த பொழுது, 80% சதவீதத்திற்கு மேல் எல்லாருடைய அனுபவம்  ஒன்றாக இருந்தது.இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது . அறிவியல் வழி இது ஒரு சிறந்த  காட்டி ( indicator) .  எனக்கும் நண்பா் அருணச்சலத்துக்கும் பொிதாக ஒன்றும் நிகழ்வில்லை என்று வருத்தத்துடன் சொன்ன பொழுது அமைதியாகநடக்கும்நிகழும்நம்புங்கள் என்றார் .

நிகழ்ந்தது. என்னுடைய நம்பிக்கையின்மை உடைந்ததுஇதை எழுதுவது தவறா  வெளியில் சொல்லக் கூடாதா என்று விதிகள் எனக்கு தொியாது அவா் கூறிய மூன்று விஷயங்களை உள்வாங்கி ,  மாலதி என்ற அகந்தையை ஒடுக்கி விட்டு கடை பிடித்தேன்ஒன்று அவா் கூறியது போல ‘௧ணம்’.  இந்தக் கணத்தில் எது நடக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 100% விழுக்காடு கவனம் செலத்துங்கள். தியானம் என்பது நீங்கள் செய்வது அல்ல. பிராா்த்தனை நீங்கள் செய்யலாம் அது கடவுளோட நீங்க போடற  dealing (குறிப்பாக என்னை பார்த்து சொன்னார் )அது இல்லைதியானம் என்பது நிகழ்வது அதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்கலாம் .ஆனால் எவ்வளவு தூரம் உங்களை கொடுக்கிறீா்கள் என்பது முக்கியம் என்று விளக்கினார்

 ஞாயிற்றுக்கிழமை கற்பனை உலகில் கொண்டு செல்லும் தியானம் பயிற்றுவித்தாா்அதற்கு முன் எல்லோரையும் இரண்டு வருடங்களில் என்ன செய்ய  வேண்டும் முதலில் எதுஇரண்டாவதாக அதற்கு அடுத்து என்ன  செய்ய வேண்டும் , முன்றவதாக நெடுநாள் கனவு குறிக்கோளாக என்ன வேணும் என்று எழுதியோ அல்லது மனதில் நினைத்துக் கொள்ளவோ செய்யுங்கள் என்று தொடங்கினார் .  கற்பனை தியானத்தில் என்னை முழுக்க  கொடுத்தேன். அவா் ஒவ்வொன்றாக குறிப்புகள் சொல்லமலையேறி , காடும் செடியும் விலங்குகளை உணர்ந்தேன் .   மேலே மேலே மேலே பறந்தேன் அந்த உயா்ந்த வெளியிலிருந்து அடர்ந்த காடு கண்டு கொண்டே இருந்த பொழுது சிறிய  ஒளிக்கற்றை தொிந்தது. மெல்ல மெல்ல கீழிறிங்கிய பொழுது ஒரு பேரொளி என்னை கவ்வியது. என்னை அணைத்து ஏதோ உறுதி கூறியதுஎன்னை ஆசீா்வதித்து கொண்டே இருந்தது. கருணைஒளிபேரருள் கடவுள்பெயா் என்ன வேண்டுமானாலும்   இருக்கட்டும்  என்னை ஒரு பொருட்டாக நினைத்து எனக்கு நம்பிக்கை கொடுத்தது. கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீா் வடிகிறதுநன்றிநன்றிநான் இதற்கு தகுந்தவளாக நிச்சயம் மாறுவேன் என்று உறுதிமொழி  கொடுத்தேன்இந்த பயிற்சிக்கு பிறகு ஒரு இடைவேளை. (பேசக்  கூடாது) ) பிறகு நமக்கு இந்த கருவிகளை கொடுத்த ஞானியா்கள்குருக்கள் எல்லாருக்கும் நன்றி தொிவித்து அவரும் வணங்கினார்  ( அவா் சிறிது உணர்ச்சி வசப்பட்டது  போல எனக்கு தோன்றியது ) பிறகு நாம் நன்றி செலுத்த வேண்டும் என்று விரும்புவர்களை  நன்றியோடு நினைக்கச்  சொன்னர்விரும்பாதவா்களையும் நினைத்து மறக்க சொன்னா். இந்த வகுப்பு நடத்தப்படும் சூழ்நிலைக்கு. அதை உருவாக்கி கொடுக்கும் உங்களுக்குஅதை செவ்வனே  நடத்தி செல்லும்  மணி அண்ணாவிற்குவகுப்பு நடத்த உதவிய ஆசிாியா்களுக்குஎல்லாவற்றிக்கும் மேல் நாமிருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி என்று ஒவ்வொன்றாக சொல்லி நாம் ஆழ்ந்து நன்றி என்று சொல்லி உள்ளம் உருகி   இருக்கையில் திருமதி  பாம்பே ஜெயஸ்ரீ  பாடிய பாரதியாருடைய,’ உயிரே உ னது பெருமை யாருக்குத்தெரியும்நீ கண் கொண்ட தெய்வம், —— ——- உயிரே நீயே  நீா் நிலம் காற்று நெருப்புஎன்று சரணாகதி  அடைந்த பாடலுடன் முடிந்ததும் ,என்ன சொல்வது. போின்ப நிலை  என்று இதைத்தான் சொல்கிறார்களா?பேரருள் என்பது இதுதானா ?

நடைமுறை வாழ்க்கை்கு அவர் கூறிய பல வழிகள் (Take home Points). கவனமின்மையை நீக்க அவர் கூறிய கருவிஏதாவது ஒரு செயல்எழுதுவதோ படிப்பதோ வீட்டு வேலையாக கூட இருக்கலாம்  எடுத்து கொண்டு முதல் ஒரு மாதத்தில்  1 ½  மணிக்கு எந்த ஒரு இடைவெளி யும் இல்லாமல் அதை செய்வேன் என்று எடுத்து கொள்ளுங்கள் அதில் வெற்றி பெற்றல் அடுத்த குறிக்கோளாக இன்னொரு   செயலை எடுங்கள் என்றாா் அது மிகவும் நடைமுறைக்கு உதவும் என்று நம்புகிறேன். மற்றொன்று  inner silence.பயிற்சிகளின் நடுவில் பேசக்கூடாது  என்று கடுமையான விதி கொண்டுவந்தார்என்னப் போல வாய் ஒயாமல் பேசிக் கொண்டிருப்பவா்க்கு  அமைதியின் அழகு இப்பொழுது தான் புரிகிறது.

சனிக்கிழமை இரவு இசை இரவாக  அமைந்தது. குருஜி பாடுவது SPB  போல இருக்கிறது என்று யாரோ சொன்னா்கள்.உற்சாகமா பாடல்கள் பாடி இதுவும் இரு த்யானம் போல ஆயிற்றுமிக மிக எதிர்பாராதது  மணி அண்ணா பாடியது மேகமூட்டத்தில் அவா் முணு முணுத்து கொண்டு வந்ததை நான் கேட்டேன் என்று சொன்னதும் குருஜி வேண்டுதலில்என் அப்பன் அல்லவா எந்தாயும் அல்லவா என்று பாடியதும் நந்தனார் உலகத்துக்கே சென்று திரும்பினோம்.நடுவில் நண்பா்கள் சட்ட நாதன்அருணாசலம் வேடிக்கை பேச்சுகள்கடைசியில் குருஜியின்அவள்  செந்தமிழ் தேன் மொழியாள்தொடங்கியதும்  எல்லோரும் சேர்த்து அனுபவித்து பாடியது

 அடுத்த நாள் விடை பெரும் பொழுது வழக்கம் போல் ஒரு மயான அமைதி .  எல்லா நண்பா்கலும் காா் அருகில் வந்து விடை பெரும் பொழுது யாரோடும் பேசாமலேயே உருவான உறவு இது.

கோயம்புத்தூர் திரும்பி வரும் வரை அந்த அழகு உலகத்தில் சஞ்சரித்துக்  கொண்டிருந்தேன்சின்ன சின்ன மாற்றங்கள் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய 100% விழுக் காடு கவனம் பேச்சு செய்கை படிப்பு எழுதுவது எல்லாவற்றிலும் கொண்டு வருகிறேன். குருஜி கற்றுக் கொடுத்த தியானம் முறைகளை இரண்டு வேளையும் தட்டு தடுமாறி செய்து முடிக்கிறேன்.நான் சொல்வது நகைப்பிற்குாியதாக தோன்றினாலும் ஒரு உடனடி பலன்  நான் கண்டது சொல்லத்தான் வேண்டும். நான் கண்ணை முடினால் psychedelic colors patternsதான் தொியும்  அந்த வண்ணங்களிலிருந்து என்னால் மீளவே முடியாது  தொலைக்காட்சிமடிக்கணினி , மொபைல் எந்தக் காரணம் என்று சொல்ல முடியாத  ஒரு எாிச்சலூட்டும் நிகழ்வு.   சனிக்கிழமை நான்  குருஜீயை நம்பி ஆழ் நிலை தியானத்தில் இருந்த பிறகு அடுத்த நாள் காலையிலிருந்து அந்த வண்ணங்கள் வருவதில்லை எல்லோரையும் போல கறுப்பு /வெள்ளை தான் தெரிகிறது

 என் நெடுநாள் கனவாக கற்பனை தியானத்தில் நினைத்து கொண்டதுஆசான் விரும்பும் உலகம்அறிவியலோடு ஆன்மீக உறுதியும் மொழி இன பேதமின்றி ஏற்ற தாழ்வு ஒன்றுமில்லாமல் கற்றலும் கற்றுவிப்பதும் அதன்வழி  பயன்கள் பெறும் உலகம். இந்த கணங்கள்  எல்லாம் நாம் அவ்வுலகத்தை நோக்கி எடுத்து வைக்கும் அடியாக இருக்கட்டும். நல்லதோா் உலகம் படைப்போம் என்று  கூறி.

வணக்கங்களுடன்,

.. மாலதி,

கோவை.

பி.கு: அடுத்து பைபிள் முகாம் வரவேண்டும் . குரான் நிச்சயம் படிக்கணும்.உங்கள் தத்துவ வகுப்பு எல்லாம் வரணும் .ஆனந்தன் சொன்னது போல வெள்ளிமலையில் வீடு வாங்கிவிடவா

முந்தைய கட்டுரையானம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைநம் உடலில் இருந்து நம்மை மீட்டல்