அஃக் இதழ் முதன்மையாக அதன் அழகிய அச்சாக்கத்திற்காகவும், அதில் வெளிவந்த நாடகங்களுக்காகவும், பிரமிள், பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதிய கவிதைகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறது. அஃக் இதழின் கவிதைச்சிறப்பிதழ் மற்றும் கவிதை பற்றிய விவாதங்கள் தமிழ் புதுக்கவிதையின் வரலாற்றில் முக்கியமானவை.