பனை இலக்கிய இயக்கம், புதுச்சேரி

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.
புதுச்சேரியிலிருந்து நவீன இலக்கியம் சார்ந்து ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென்று நீண்டகாலமாக ஒரு திட்டம் இருந்துகொண்டேயிருந்தது. நவீன இலக்கியத்தின் முக்கிய முகமான பாரதி புதுச்சேயியுடன் நெருக்கமாக இருந்தும், அதன் தொடர்ச்சியாக வெகு சிலரே இருந்துள்ளனர். புதுச்சேரி இலக்கியம் உலகம் இன்னும் பல தசாப்தங்கள் பின்னோக்கியே உள்ளது.
அதன்படி ஒத்திசைவு கொண்ட இலக்கிய நண்பர்கள் இணைந்து “பனை” என்ற நவீன இலக்கிய அமைப்பை உருவாக்கியுள்ளோம். தொடர்ச்சியாக நவீன இலக்கியம் சார்ந்த உரையாடல்களும் நிகழ்வுகளையும் ஒருங்கினைக்க திட்டமிட்டுள்ளோம். அதன் முதல் நிகழ்வாக “குருகு” இணைய இதழ் குறித்த உரையாடலை வருகின்ற மார்ச் மாதம் 2ஆம் தேதி மாலை 5:30 நடக்கவிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அரிசங்கர்
முந்தைய கட்டுரைவரவேற்பறை அலங்காரமாக நூலகம்
அடுத்த கட்டுரைநீலத்தில் மூழ்குதல்