மூன்றுநாள் விடுப்பு- கடிதம்

நண்பர் குருஜி,

வணக்கம் !

கடந்த வருடம் 2023 – நவம்பர் 17,18,19, வெள்ளி மலையில் நடைபெற்ற மரபார்ந்த யோக பயிற்சியின் விமர்சனங்களை நான் உளமாற எழுத எப்போதோ தயார் ஆனால் உடலாற எழுத ஆழ்ந்த பயிற்சியும் அதன் விளைவாக பல மாற்றங்களும் நிகழ வேண்டும் எனவே தான் விமர்சனம் ஏதும் பதியாமல் என் உள்ளார்ந்த கருத்துக்களை பதிவிடுகிறேன்.

பாலைவன பகுதில் பணத்தை தேட தொடங்கிய பயணத்திலும் என்னை சுற்றி உள்ள உறவுகளின் தேவைகளையும் நிறைவேற்றவும் என் எழுதப்படாத கடைமைகளை‌முடிக்கும் கால ஓட்டத்தில் முப்பதை தொடும் வயதில் தான் சற்றே பின்னோக்கி ஒடி வந்த பாதையை திரும்பி பார்க்க முயன்றேன்‌ முடிவில்லை …. ஆமாம் முதுகு தண்டின் வீக்கம் தான் திரும்பமுடியவில்லை.

 J M ன் வளைத்தல பக்கத்தில் தான் யோக முகாமின் முன் பதிவை நட்பு வட்டத்தின் மூலம் அறிந்து கொண்டேன். என் அதிர்ஷ்ட தேவதை வருடாந்திர விடுமுறையை கொடுக்கும் நேரமும் நெருங்கியது பாலைவனத்தில் இருந்தே பதித்தேன் என் வருகையை

பெண்களின் மிகப்பெரிய ஏமாளிதனமான போர்வையானஇதற்கு மேல ஏன் இந்த வெட்டி வேலைஎன்பதை விட்டு கொஞ்சம் விலகி நான் எனக்கான‌ வாழ்வை வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தது.

எனக்காக ஒரு துளியும் துரோகம், வஞ்சம், நடிப்பு‌ இல்லாமல் இந்த ஆத்மாவினை உலகிற்கு அறிமுகம் செய்த மாபெரும் மதிப்பிற்குரிய என் திரு.உடல்.அதற்காக முந்நூறு அறுபத்து ஐந்து நாள்களில் மூன்றே மூன்று நாள்கள் ஒதுக்கி நான் ஈரோடு நோக்கி எனக்காக மட்டுமேயான நீண்ட தூர முதல் தனிமையிலான பயணம்.   

வயது வரம்பில்லா நட்பும், இப்படித்தான் இருக்க முடியும் என்ற ரோடும், முடிந்தால் தாண்டி போ என்ற ஓடையும், வேண்டும் என்றால் பார் என்ற இயற்கையும், ஒரு முறையேனும் சுவாசித்து விடு என்ற காற்றும், அழகின்‌ கர்வத்தோடு அமைந்த இருளும், இப்படித்தான் வாழ வேண்டும், இப்படித்தான் வாழ்ந்தோம், இதையெல்லாம் தானே உருமாற்றி இருக்கிறார்கள் என்று மேகானந்தி அகவி சென்றது இன்னும் இந்த கனரக வாகன இரைச்சலில் கனத்தது ஒலிக்கிறது

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பதை முதல் நாளே உணர்த்திய சௌந்தர் ஜி – “டீ போடுவதற்கு செலவாகும் சக்தியில் பாதி டீ போட போகிறோம் என்பதை சிந்திப்பதில் செலவாகிறதுஎன்றார்.அப்படி பார்த்தால் எல்லா 90 களின் மழளைகளும் இரவினை விடிய வைப்பதே சிந்தனைகளால் அல்லவா.

உடல் அற்புதமானது,‌உறுப்புகள்‌ நேசிக்க வேண்டியவை, சக்தி சேமிக்க வேண்டியவை, உணவு தேவையானது, உடற்பயிற்சி அத்தியவசியமானது என்பதை எல்லாம் வாழ்ந்து தன் இளமையான உடலாலும் ஆன்மிகமான பேச்சாளும் உணர வைத்த தருணம் அந்த மூன்று நாள்

உணவும், உறைவிடமும் கொடுத்து கதை சொல்லி உறங்க செல்லுங்கள் என்பதை உரக்க சொல்லிய மணி அண்ணும், எல்லோரின் அம்மாவும் அவரவர் தட்டுகளில் வந்து பரிமாறியது போல வீட்டின் உணவை அன்போடு கொடுத்த ஆச்சியும் எப்போதும் நித்தியவணத்தின் அச்சயபாத்திரங்கள்.

 இதை படிக்கும் பெண்களேபெண்களோடு வாழும் ஆண்களே. மாதந்தோறும் மூன்று நாள் விடுப்பு வேண்டாம் வலியை பொறுத்துக் கொள்கிறோம்வருடத்தில் மூன்று நாள்கள் மட்டுமேனும் விடுப்பு கொடுங்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகிறோம்

விஜிஸ்ரீ

முந்தைய கட்டுரைஎதுகையும் மோனையும்
அடுத்த கட்டுரைகுறும்பனை பெர்லின்