சிறுமைகளும் அவமதிப்புகளும், உரையாடல்

சிறுமைகளும் அவமதிப்புகளும் – கடிதம்

 அன்புள்ள ஜெ,

சிறுமைகளும் அவமதிப்புகளும்நாவலைப் படித்து முடித்த உடனேயே நீங்கள் எழுதியமன்னிக்காதே நெல்லி‘, ‘அசடனும் ஞானியும்‘, பி.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய
கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்‘, ‘தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல்நபக்கோவ்என தஸ்தயெவ்ஸ்கி தொடர்பான பல கட்டுரைகளைப் உங்கள் தளத்தில் தேடித்தேடி படித்தேன்.

இவை அனைத்தும் அவருடைய படைப்புகளைப் பற்றி மிகவும் ஆழமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். இக்கட்டுரைகள் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளைப் பற்றி நல்லதொரு புரிதலை எனக்கு ஏற்படுத்தின.

இனி தஸ்தயெவ்ஸ்கியின் பெரும்படைப்புகளை படிக்கப் போகும் படிப்பாளர்கள் அனைவரும்சிறுமைகளும் அவமதிப்புகளும்நாவலில் இருந்து தொடங்குவதே சிறந்தது என்று கருதுகிறேன். இந்நாவலின் வழியாக சென்றுகுற்றமும் தண்டனையும்‘, ‘அசடன்‘, ‘கரமசோவ் சகோதரர்கள்ஆகியவற்றை அணுகுவதே இந்த எழுத்தாளரைப் புரிந்துகொள்வதற்கு மிகச்சிறந்த வழி என்று நினைக்கிறேன்.

‘Possessed’ நாவல் இன்னும் தமிழாக்கம் செய்யப்படவில்லை என்பதால் நான் இன்னும் அந்த நாவலை மட்டும் படிக்கவில்லை. ஆனால் என்னால் இப்போதே உறுதியாகச் சொல்லமுடியும் ‘Possessed’ நாவலும் கூட ஏதோ ஒரு வகையில்சிறுமைகளும் அவமதிப்புகளும்நாவலில் இருந்தே தோன்றியிருக்கும். அவர் எப்படியோ இந்நாவலில் இருந்தே தன்னை கண்டடைந்திருக்கிறார். ஒரு மாபெரும் எழுத்தாளனின் பிறப்பும், தொடக்கமுமாக இந்நாவல் அமைந்துள்ளது.

ஆனால் ஏனோ இந்நாவல் மிகுதியாக பேசப்படாத ஒரு படைப்பாகவே இருக்கிறது. அது ஏனென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மணிமாறன்

அன்புள்ள மணிமாறன்

நான் பலமுறை எழுதியிருக்கிறேன். தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்கத் தொடங்கவேண்டிய நாவல் ‘The ‘சிறுமைகளும் அவமதிப்புகளும்’ தான். அதன்பின் குற்றமும் தண்டனையும். அதன்பின் கரமசோவ் சகோதர்கள். நிலவறை குறிப்புகள், ஆகியவை எளிவைதான். ஆனால் கரமஸோவ் சகோதரர்களை வாசித்த பின் அவற்றை வாசிக்கவேண்டும். கரமஸோவ் சகோதரர்கள் தஸ்தயேவ்ஸ்கியின் மையப்படைப்பு. மற்றவை அந்த மையத்தில் இருந்து அவர் கொண்ட விலகல்கள்தான்

ஜெ 

முந்தைய கட்டுரைதேவியின் பாதம் -கடிதம்
அடுத்த கட்டுரைபால விநோதக் கதைகள்