வைணவ இலக்கிய வகுப்புகள் அறிவிப்பு

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழின் இனிமை முழுமையாகச் செறிந்திருக்கும் கவிதைக்கடல். ‘நாலாயிரம் அறியார் நற்றமிழின் சுவையறியார்’ என்று சொல்லப்படுவதுண்டு. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை ஓரிரு செய்யுட்களாக அங்கிங்கே பலர் வாசித்திருப்பார்கள். நூல்களும் கிடைக்கின்றன. ஆனால் முறையாக ஓர் ஆசிரியரிடமிருந்து கற்றாலொழிய நம்மால் நாலாயிரத்தின் காவியத்தன்மை, தத்துவம் ஆகியவற்றுக்குள் நுழைய முடியாது.

அதற்கென்று உருவாக்கப்பட்ட வகுப்பு இது. நவீன இலக்கிய விமர்சகரும், இலக்கியவாதியுமான ஜா.ராஜகோபாலன் இவ்வகுப்புகளை நடத்துகிறார். தொழில்முறையாக ராஜகோபாலன் காப்பீட்டுத்துறையினருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துபவர். இருபதாண்டுக்காலம் அத்துறையில் பயிற்றுநராக அனுபவம் கொண்டவர். பிரபந்தத்தின் உள்ளடக்கம், கவித்துவம் ஆகியவற்றை அவர் விளக்குவார்.

பிரபந்தப் பாடல்களை அவற்றுக்கான தனி பண்ணிசையுடன் கேட்டறியவேண்டும். அப்போதுதான் ஆலயங்களுக்குச் செல்லும்போது அங்கு பாடப்படும் பாடல்களுக்கு நம் செவிகள் திறக்கும். அது இங்கே இருந்துகொண்டிருக்கும் ஒரு மாபெரும் மரபை நாம் அறிமுகம் செய்துகொள்வதுதான்.நாலாயிரம் பாடல்களையும் மனப்பாடம் செய்து பாடும் வைணவ அறிஞர் மாலோலன் ராஜகோபாலனுடன் இணைந்து பாடல்களை பாடிக் கற்பிப்பார்.

ராஜகோபாலன்

மார்ச் மாதம் 22 23 மற்று 24 (வெள்ளி சனி ஞாயிறு) தேதிகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் குருகுல முறையில் இவ்வகுப்பு நிகழும். இது இணைய வகுப்பு அல்ல. இணையப்பதிவும் கிடையாது. அத்தகைய மேலோட்டமான அறிதல்களில் எங்களுக்கு அக்கறை இல்லை. இது இக்கல்வியின் பொருட்டு மூன்று நாட்களை முழுமையாக ஒதுக்க மனம் உள்ளவர்களுக்கு மட்டுமான வகுப்பு.

வைணவ தத்துவ அறிமுகம், நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் வரலாறு, அதன் உள்ளடக்கம் ஆகியவை கற்பிக்கப்படும். அதன்பின் அப்பாடல்களை பொருள்கொள்ளும் முறை கற்பிக்கப்படும். ஏற்கனவே 2 வகுப்புகள் நிகழ்ந்துள்ளன. இது மூன்றாம் வகுப்பு

பங்கெடுக்க விழைபவர்கள் எழுதலாம்

[email protected]


  

பின்னர் வரவிருக்கும் வகுப்புகள்

 

ஆலயக்கலைப் பயிற்சி மார்ச் 29 30, 31

 

முந்தைய கட்டுரைகால்வின் துளை
அடுத்த கட்டுரைசிந்தனைப்பயிற்சி, கடிதம்