ஜேசுதாஸ் பற்றி ஒரு சிறு கட்டுரை மாத்ருபூமி நாளிதழுக்காகக் கேட்டார்கள். மலையாளத்தில் நான் கையால் எழுதி அனுப்புபவன். என் கையெழுத்து மிக மோசமாக இருக்கும்.ஆகவே நான் அதை வாசித்து அனுப்புவதுமுண்டு. அந்தக் குரல்பதிவை மாத்ருபூமி இணையதளம் வழக்கமாக வெளியிடும். அதற்கு ஒரு செவிகூர்வார் வட்டம் உண்டு. அந்த பதிவை என் நண்பர் யூடியூபில் ஏற்றியுள்ளார்