சைவத் திருமுறைகள், அறிமுக வகுப்பு

வைணவ இலக்கியம் பற்றிய அறிமுக வகுப்புகள் இரண்டை நடத்தியுள்ளோம். அதைத் தொடர்ந்து சைவ இலக்கிய அறிமுக வகுப்பு ஒன்றை ஒருங்கிணைக்கிறோம். பிப்ரவரி மாதம் 23,24 மற்றும் 25 தேதிகளில் (வெள்ளி சனி ஞாயிறு)  ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

புகழ்பெற்ற பேச்சாளரும் சைவ அறிஞருமான மரபின்மைந்தன் முத்தையா வகுப்பை நடத்துவார். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்து அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்த  முத்தையா நான்கு தலைமுறைகளாக சைவ அறிஞர்கள் கொண்ட மரபைச் சேர்ந்தவர். சைவப்பேரறிஞர்களாகிய அ.ச.ஞானசம்பந்தன், ம.ரா.பொ.குருசாமி உள்ளிட்டோருடன் அணுக்கமாக பழகியவர். முப்பதாண்டுகளாக எனக்கு அணுக்கமாகத் தெரிந்தவர்.

இந்த வகுப்பு ஆறு அமர்வுகளிலாக மொத்தம் 18 மணி நேரத்திற்குமேல் நிகழும் ஒரு முழுமையான பயிலரங்கம். சைவத் திருமுறைகள் தொகுக்கப்பட்ட வரலாறு, திருமுறைகளின் அமைப்பு மற்றும்  உள்ளடக்கம், திருமுறைகளிலுள்ள சைவதத்துவம், திருமுறைகளில் பயின்றுவரும் அடிப்படையான கவித்துவ உருவகங்கள் ஆகியவற்றை விளக்குவது. கூடவே தேர்ந்தெடுக்கப்பட்ட சைவத் திருமுறை நூல்கள் இருந்து பாடல்களை எடுத்து அவற்றை பொருள்கொள்ளும் முறையையும் கற்பிப்பது. சைவ இலக்கியத்தை அதன் அழகியலை உணர்ந்து பயில்வதற்கான வழிகாட்டல்கள் கொண்டது.

சைவத்தை அறியாதோர் தமிழறியாதோர் என்றே சொல்லிவிடலாம். தமிழில் சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய வகுப்புகள் இவை. சைவம் போன்ற ஒரு மெய்யியல் வெளியை இப்படி ஒரு முறையான ஆசிரியரும் பயிற்சிவகுப்பும் இன்றி எவரும் உள்நுழைந்து கற்கவும் இயலாது. அந்நுழைவு வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு பயணத்தின் தொடக்கமும் ஆகும்.

ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்க

[email protected]

முந்தைய கட்டுரைமானுட அறிவை நம்புதல்- கேள்விபதில்
அடுத்த கட்டுரைஒரு கனவு