மறக்கப்பட்ட மேதை- ஹன்னா அரெண்ட்

பதினேழாம் நூற்றாண்டு முதல் மேதைகள் என்று சொல்லத்தக்க பெண் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் தொடர்ச்சியாக பொதுச்சிந்தனைத் தளத்தில் புறந்தள்ளப்பட்டனர் என்பது சைதன்யாவின் கொள்கை. இலக்கியம் அல்லது சிந்தனையின் அடிப்படைகள் இன்னின்னவை என வகுத்துக்கொண்ட அன்றைய அறிவுமையங்கள் பெண்களின் சிந்தனைகளை சிறியவட்டத்திற்குள் அமைந்தவை, பழைய மதிப்பீடுகளைக் கொண்டவை, மெல்லுணர்ச்சிகள் நிறைந்தவை என ஒதுக்கின. தமிழில் இந்த எந்தப்பெயரும் ஒருமுறைகூட எழுதப்பட்டு, பேசப்பட்டு நான் அறிந்ததில்லை.

அன்றைய அறிவுமையங்களின் கலையிலக்கிய- சிந்தனை சார்ந்த அளவுகோல்கள் ஆண்மைய நோக்கு கொண்டவை , பழையவை என வாதிடும் சைதன்யா இங்கு மட்டுமல்ல மேலைநாடுகளிலேயேகூட மறக்கப்பட்ட பெண் சிந்தனையாளர்களையும் இலக்கிய மேதைகளையும் தொடர்ச்சியாக முன்வைத்து எழுதி வரும் கட்டுரைகள் நீலி இதழில் வெளிவருகின்றன. அவற்றில் அண்மையக் கட்டுரை ஹன்னா அரெண்ட்.

இக்கட்டுரைகளில் நான் காணும் சிறப்பு என்பது இவை வெறுமே வாசித்த தகவல்களைச் சொல்வன அல்ல என்பதுதான். தகவல்களில் ஒரு பகுதி மட்டுமே சொல்லப்படுகிறது- மேலதிகத் தகவல்களை எவரும் இணையத்திலேயே பெற முடியும். இக்கட்டுரைகளில் அந்த மேதைகளை மேலைச்சிந்தனையின் தொடர்ச்சியில் எங்கே பொருத்துவது, அவர்கள் அதை கடந்துசெல்லும் இடம் என்ன என்பது கூரிய சொற்றொடர்களில் சொல்லப்படுகிறது. அத்துடன் ஒருவித அறைகூவும் தன்மையுடன் இக்கட்டுரைகள் நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் முன்வைத்த எளிய எதிர்ப்புகள், கசப்புகளுக்கு மாற்றாக ஒரு விரிந்த பெண்சார் பார்வையை முன்வைக்கின்றன.

ஹன்னா அரென்ட் – சைதன்யா

முந்தைய கட்டுரைநெல்லை, அருண்மொழி உரை
அடுத்த கட்டுரைகோவர்தனனின் கடைசி முகநூல் பதிவு