குருகு- யட்சகானம், முருகனின் உருவங்கள்…

அன்புள்ள நண்பர்களுக்கு 

குருகு இதழ் தனது ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது, தொடர்ந்து செயல்பட உற்சாகப்படுத்தும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி

 புதுவருடத்தில் குருகின் பதினோராவது இதழ் வெளிவருகிறது. யக்ஷகானா கலைஞரும் இடகுஞ்சி மகாகணபதி யக்ஷகான குழு இயக்குனருமான சிவானந்த ஹெக்டேவின் நேர்காணல் வெளியாகியுள்ளது. தமிழகத்துக்கு வெளியேயுள்ள கலை வடிவங்கள், கலைஞர்கள் குறித்த அறிமுகத்துக்கான ஆரம்பமாக இது அமையும் என்று நம்புகிறோம். கன்னட இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சிவராம் காராந்த் யக்ஷகானா குறித்து எழுதிய நூலிலிருந்து ஒரு கட்டுரையை விக்னேஷ் ஹரிஹரன் மொழிபெயர்த்திருக்கிறார்

பௌத்தம் தொடர்பான ஆனந்த குமாரசாமியின் மஹாயானத்தின் துவக்கம் என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு வெளியாகின்றது. கிறிஸ்துவின் சித்திரங்கள் தொடரில் கிறிஸ்துவின் உடல் எவ்விதம் கிருஸ்தவ இறையியல் கோட்பாடுகளுடன் இணைத்து பார்க்கப்பட்டது என்று விளக்கப்படுகிறது. மானுடவியல் ஆய்வாளர் கரசூர் பத்மபாரதியின் திருநங்கையர் இனவரைவியல் குறித்த கட்டுரை இந்த இதழில் இடம்பெறுகிறது. சமீர் ஓகாசாவின் அறிவியல் தொடர் ஒப்பிடவியலாமை குறித்து பேசுகிறது

எப்பொழுதும்போல இந்த இதழும் வாசகர்களுக்கு நிறைவளிக்கக்கூடியதாக இருக்கும் என நம்புகிறோம்

 கடந்த ஓராண்டாக வெளிவந்த குருகு இதழ்களின் மீதான தங்களது வாசிப்பனுபவத்தை எழுத்தாளர்களும் வாசகர்களும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர், அவற்றில் முக்கியமான சில பார்வைகள் இதழில் வெளியிடப்படுகின்றன. குருகு இதழ் வாசகர்களின் நம்பிக்கையை அபிமானத்தை பெற்றிருப்பது இன்னும் பொறுப்புடன் செயல்படவும் எங்களை ஆற்றுப்படுத்தும்

 https://www.kurugu.in/?m=1 

 பிகுகுருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்https://twitter.com/KuruguTeam 

 அன்புடன் குருகு

முந்தைய கட்டுரைஒரு தொடக்கம்- கடிதம்
அடுத்த கட்டுரைஆர்.பி.எஸ்.ராஜூ