தேவியின் விளையாடல் – கடிதம்

சார் வணக்கம்

தேவி என்ற சிறுகதை தொகுப்பில் தேவி என்ற தலைப்பில் அந்த சிறுகதை மிக பிரமிப்பாக நவீனமாக இந்த காலத்துக்கும் பொருத்தமாக உள்ளுணர்வும் உளவியலும் சிந்தனைகளும் கலை உணர்வு மிக்கவர்களின் கற்பனையும் கலந்த உயரிய சிறுகதையாக நான் எண்ணுகின்றேன் வாழ்த்துக்கள் சார் ஒரு பெண்ணுக்குள் அனைவரும் அடக்கம் என்பதை அடக்கமாக நகைச்சுவையா ஒரு தேடலாக அந்தப் படைப்பு இருந்தது பிரமிப்பு உள்ளபடியே என்னும் சிந்தனையை விட்டு அகலவில்லை சிந்தனை முழுவதும் உங்கள் படைப்பை வாசிக்கும் எண்ணத்தில் ஒவ்வொரு தங்களின் படைப்புகளை தேடி தேடி வாசித்துக் கொண்டிருக்கின்றேன் படைப்பையும் என்னையும் நேசிக்க வைத்த உங்கள் நேசத்துக்கு நன்றி

ரவிக்குமார்

*

அன்புள்ள ஜெ

தேவி சிறுகதை தொகுதியை தற்செயலாகவே எடுத்தேன். அந்த கதை என்னை திகைப்படையச் செய்தது. உற்சாகமான ஒரு கிராமத்து நாடகம் போடும் அனுபவமாக இருந்த கதை ஏதோ ஒரு தருணத்தில் இன்னொரு அர்த்தம் கொள்ள ஆரம்பித்தது. முப்பெருந்தேவியர் என்ற அர்த்தம் வந்தது. தேவியின் திருவிளையாடல் என்றே வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட சிறுகதை. அந்த தொகுதியின் எல்லா கதைகளுமே அழகானவை. நுட்பமானவை. ஆனால் உற்சாகமான வாசிப்பு அளிக்கும் கதைகள்

ஜெகன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைகவிதை இதழ்
அடுத்த கட்டுரைநித்ய சைதன்ய யதி