சில்லறை-கடிதங்கள்

முதலில் சில்லறை  கதையைப் பாதிவரை படித்து விட்டுவிட்டேன். இணையத்தில் படிப்பது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் குறைக்கிறது. திருமதி சுசீலாவின் கடிதத்தையும் திரு.ஜெயமோகனின் பதிலையும் படித்துவிட்டு (சில்லறை-கடிதம்)மீண்டும் கதையை முதலில் இருந்து படித்து முடித்தேன். புதிய பரிமாணத்தைக் கதை கொடுத்தது.

நம்பியின் செயல் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கேட்பதற்கும் சில்லறைத்தனமாக இருக்கிறது. சும்மா இது ஒரு கதை என்பதுபோல தெரிகிறது. ஆனால் இதுபோன்ற நபர்களை நடைமுறையில் பார்க்கும்போது கதை புதிய பரிமாணத்தைத் தருகிறது.
எனக்குத் தெரிந்து முன்பு என்னோடு தங்கியிருந்த நண்பர் ஒருவர் இப்படித்தான். ஒரு கால் குயர் நோட்டை வைத்துக் கொண்டு தினமும் கணக்கு எழுதிக் கொண்டிருப்பார். அவரால் நிம்மதியாக மற்றவரோடு ஒத்து வாழ முடியாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம். ஒரு நாள் அவர் தன்னுடைய செல்போன் பில்லை வைத்துக் கொண்டு ஒவ்வொரு எண்ணாக சரி பார்த்தார். தான் பேசிய எண்தானா என்று! சில எண்கள் தான் பேசியதாக இல்லை. நூறு ரூபாய்க்கு மேல் கணக்கு இருந்தது. இதை நண்பர் கண்டுபிடித்துவிட்டார். இன்னொரு நண்பருடைய செல்போனை ரகசியமாக எடுத்து அதில் அந்த நம்பர் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார். கறாராக பேசி பணத்தை வசூலித்துவிட்டார்.
இன்னொரு நண்பர் நன்றாக பொருள் சம்பாதிக்கக் கூடியவர்தான். திருட்டுத்தனமாகப் பேச வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை நண்பரி்ன் செயல் இவரை எதிர்மறையாகச் செயல்படத் தூண்டியிருக்கலாம். கண்டுபிடித்தவர் கறாராகப் பேசி வசூலித்திருக்கத் தேவையுமில்லை. அந்த நூறு ரூபாயால் அவர் பெரியதாக எதையும் இழந்திருக்கப் போவதில்லை. இருந்தாலும் என்னை எப்படி ஏமாற்றலாம். நான் தான் ஏமாந்தவனா என்ன என்ற நினைப்புத்தான். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்தல்தானே!
இப்படி எல்லாவற்றிற்கும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை நரமாகத்தான் போய்விடும். இதற்குப் பொருள் ஊதாரித்தனமாக செலவு செய்ய வேண்டும் என்பது அல்ல. சில்லறைப் புத்தி தேவையில்லை என்பதே!
சில்லறைக் குணம் பழக்கதோஷத்தால் வாழ்கையை நரமாக்கிவிடும் போல!
அன்புள்ள

பா.மாரியப்பன்

*********

Dear sir,

I was reading about somalia famine and feeling very bad and was wondering what we could do.  In india I have seen people who buy things without the need or just because they like it and it is all because they dont realise the value of money or it is available to them in abundant or simply dont think much before spending money.
One example could be the number of dresses each one of us have. Consider shoes/slippers/even cellphones,  each one of us have in excess!! if we could cut down on these things and prudently do our shopping, we could save a great deal that can be used for needy people.  Reading about somalia and the children there dying everyday is really heart breaking.
if you could write an article about this luxurious spending (or anything that will help to make people think more about the other unfortunate people), atleast few percentage of the people who are your regular readers will change.
If situation and time  permits, please write an article about this. This is only a request from me.
Thanks,
Netvid

அன்புள்ள வித்யா,

உங்கள் கடிதம் காட்டுவது மிக எளிமையான நம்பிக்கையை. இன்றுள்ள நுகர்வு என்பது ஒரு சாதாரண பழக்கம் அல்ல. அது இந்தக்காலகட்டத்தின் உலகளாவிய வாழ்க்கைக்கோட்பாடு. பொருளாதாரக் கோட்பாடு. இந்தியாவை விட அமெரிக்காவில் ஐந்து மடங்கு பொருட்கள் வாங்கிக்குவிப்பதை நண்பர்களின் வீடுகளில் கண்டேன்.

இந்த நுகர்வோர் மனநிலைக்கு ஆதரவாகவே உலக அளவில் உள்ள இரு பெரும் சிந்தனைப்போக்குகளும் உள்ளன, முதலியம் மற்றும் மார்க்ஸியம். அதற்கு நேர் எதிரான வாழ்க்கைப்போக்கை முன்வைத்த தரிசனம் காந்தியம். ஆனால் அது நடைமுறையில் இன்னும் சோதிக்கப்படாததாகவே உள்ளது. அதன் முக்கியத்துவத்தை உணருமளவுக்கு இன்னும் நெருக்கடி முற்றவில்லை

முதல் உலகின் நுகர்வு வெறியே மூன்றாமுலகில் சோமாலியாக்களை உருவாக்குகிறது. சோமாலியா ஐரோப்பா உறிஞ்சி உதறிய டப்பா. அதில் இப்போது குப்பைகளையும் போட்டு வைக்கிறார்கள். ‘ பிரிட்டன் வல்லரசாக ஆக உலகமே தேவைப்பட்டது .இந்தியா பிரிட்டனாக ஆகவேண்டுமென்றால் நாலைந்து உலகம் போதாது’ என்றார் காந்தி

சேமிப்பையும் சிக்கனத்தையும் வாழ்க்கையாகக் கொண்ட நம் முந்தைய தலைமுறைக்கு காந்தி புரிந்துகொள்ளக்கூடியவராக இருந்தார். இந்தியா காந்திய யுகத்தில் இருந்து இன்று அகன்று விட்டது. செலவு மேலும் செலவு அதற்கேற்ப உற்பத்தி அதற்கேற்ப சம்பாத்தியம் என்ற நிலை நோக்கிச் செல்கிறது. அதையே விவேக் ஷன்பேக்கின் சில்லறை என்ற கதையும் சுட்டுகிறது

காந்தியைப் புரிந்துகொள்ளவும் முன்வைக்கவுமே இந்த தளம் தொடர்ந்து முயல்கிறது.

ஜெ


சில்லறை-விவேக் ஷன்பேக்

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரேவுக்காக ஒரு தமிழ் இணையதளம்
அடுத்த கட்டுரைஅருந்ததி