ஆயுர்வேத அறிமுக வகுப்புகள், அறிவிப்பு

மூன்று மாதங்களுக்கு முன்பு ஓர் ஆயுர்வேத அறிமுக வகுப்பு நடத்தினோம். அதில் பங்கெடுத்தவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒரு வகுப்பு வரும் பிப்ரவரி 9 ,10 மற்றும் 11 (வெள்ளி சனி ஞாயிறு)  தேதிகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழவிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம்.

[email protected]

ஆயுர்வேத மருத்துவரும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவருமான சுனில் கிருஷ்ணன் இந்த வகுப்புகளை நடத்துகிறார்.

சிந்திக்கும் மனிதன் தன் உடலைப் பற்றி தானே அறிந்துகொண்டே இருப்பான் என்று காந்தி சொன்னார். மேலைமருத்துவம் உடல்பற்றிய ஞானத்தின் பெருந்தொகுப்பு. நாம் ஒவ்வொருநாளும் அதை வெவ்வேறு ஊடகங்கள் வழியாக அறிந்துகொண்டிருக்கிறோம்.

ஆயுர்வேதம் இந்த மண்ணுக்குரிய மருத்துவம். அது நோய் – சிகிழ்ச்சை என்னும் அளவில் உடலை அணுகவில்லை. உடலை வெவ்வேறு சமநிலைகள் கொண்ட ஒன்றாக அணுகுகிறது. உடல்- உள்ளம் என்னும் சமநிலையும் அவற்றில் ஒன்று. ஆயுர்வேதத்தை அறிவதென்பது முற்றிலும் புதிய கோணத்தில் நம் உடலையும் உள்ளத்தையும் நாம் அறிவதுதான்.

நம் நோய்களை பற்றி மட்டுமல்லாமல் நம் உடலும் உள்ளமும் செயல்படும் விதத்தைப் பற்றி அறியவும், அவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் பயிற்சி இது

முந்தைய கட்டுரைதேன்நடனம்
அடுத்த கட்டுரைநீண்ட பயணம்- ரம்யா