சைவ சித்தாந்த சமாஜத்தின் சார்பில், 1912 முதல் வெளிவந்த இதழ் சித்தாந்தம்.1980-களில் சைவ சித்தாந்த சமாஜம், சைவ சித்தாந்தப் பெருமன்றமாகப் பெயர் மாற்றம் பெற்றது. நல்லுார் சரவணன் தலைமையில் இயங்கி வரும் இம்மன்றத்தின் சார்பாக தற்போதும் ‘சித்தாந்தம்’ இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நுாற்றாண்டைக் கடந்த முதல் சைவ இதழ் என்ற பெருமை சித்தாந்தம் இதழுக்கு உண்டு.