பின்நவீனத்துவம் – ஒரு கடிதம்

அஜிதன் உரை: மருபூமி வெளியீட்டு விழாவில் அஜிதன் பேசியதை இருமுறை கேட்டேன். கூர்ந்து கவனிக்க வேண்டிய சிறப்பான உரை, அதற்கான உழைப்பு, பரந்த வாசிப்பு, ஓயாத விவாதங்கள் மூலம் அடைந்த நிலையது. எப்போதும் கூச்சலும், காழ்ப்புகளும் சுற்றி இருக்கும் சமூகத்தில் அரிதாக இது போன்ற அனுபவங்கள் நமக்கு அமைகின்றன. அதற்க்கு ஒருவர் முழுநேரமாக அந்த வேலையை செய்யவேண்டியிருக்கிறது.

நான் அஜிதனை வாசித்தது மைத்திரி தான் முதன்முதலாக. அப்போது எனக்கு சிலகேள்விகள் எழுந்தது, பின்வரும் படைப்புகளில் இன்னும் ஆழமாக இருந்தது. குறிப்பாக அல் -கிஸ்ஸா நாவல் வாசிக்கும் போது. Love, compassion,Sincerity, Truth, God போன்ற அடிப்படைகள் தான் அவர் படைப்பின் இயல்பா என்று . ஜெ அந்த இடத்திற்கு தான் வந்து சேர்ந்தார் , காடு நாவலை சொல்லலாம், ஆனால் அதற்க்கு அவர்க்கு நிறைய காலம் தேவைப்பட்டது.

பொதுவாக எழுத்தார்களுக்கென்று ஒரு மரபு இருக்கும், அவர்கள் என்னதான் பரந்த வாசிப்பாளர்களாக இருப்பினும், தன்னுடைய படைப்புக்களை “அந்த சிந்தனையோட்டத்தை” தழுவியே உருவாக்கமுடியும். நான் இதை “unconscious decision” என்று எடுத்துக்கொள்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை, மரபை விட எடுத்துக்கொண்ட படைப்பின் தரமே முக்கியம்.

பொதுவாக 80 களுக்கு பிறகு தமிழில் எழுதுபவர்களுக்கு பின்-நவீனத்துவ கவர்ச்சி இருந்தது. பின்நவீனத்துவம் பொதுவாக முதலாம் உலகப்போருக்கு பின்பு உருவான இயக்கம். ஒரு நூற்றாண்டாக இலக்கியம், இசை, ஓவியம், நவீன ஓவியம் என்று அதன் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது. எளிதாக சொல்வதானால் “மையத்தை நோக்கி செல்லாமல், ஒரு குழந்தை கலைத்து போட்டு விளையாடும் விளையாட்டு, இங்கு விதிகள் இல்லை, Authority, authenticity யோ கிடையாது. நான் உருவாக்கிய விதியும் விதியே, நீ உருவாக்கிய விதியும் விதியே.”.

இசையில் John Adams, Meredith Monk போன்றவர்கள் பின்நவீனத்துவ இசைக்கலைஞர்கள். எனக்கு அதற்கு முந்தைய avant-grade(பின்-நவீனத்துவம் போன்று உருவான மற்றொரு அலை) விருப்பமான இசை, இசையில் எல்லைகளை விஸ்தரித்த ஒரு வடிவம் அது. கட்டிடம் மட்டும் ஓவியத்தில், பொருட்களில் dadaism anti-art இயக்கம் (ஆண்கள் கழிப்பறை கோப்பை வடிவில் சிகரெட்டு ஆஸ்ட்ரேயை வடிவமைத்தல்). பின்நவீனத்துவம் உலகளாவிய உண்மைகளின் கருத்தை நிராகரிக்கிறது மற்றும் கலாச்சார சார்பியல்வாதத்தை தழுவுகிறது. வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் தனிநபர்களில் முன்னோக்குகள் மற்றும் விளக்கங்கள் வேறுபடுகின்றன என்பதை இது அங்கீகரிக்கிறது.

முழுக்க முழுக்க இரண்டாம் உலகப்போருக்கு அதற்க்கு அடிப்படையான மையவாத கருத்துக்களுக்கு வெளியே பேசியது தான் பின்நவீனத்துவம். மேற்கத்திய உலகில் பின்நவீனத்துவ நாவல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. “Infinite Jest” by David Foster Wallace, White Noise” by Don DeLillo அந்தவகையில் முக்கியமான நாவல். தமிழில் அந்த அலை 80 களில் தீவிரமாக உருவாக்கியது. தமிழில் அந்தளவில் வந்த ஓரளவு(கணிக்கவும், ஓரளவு மட்டுமே) சுந்தரமசாமியின் ஜெ.ஜெ. சிலக்குறிப்புகள். ஆலையை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூவு சர்க்கரை என்று சொல்வார்களே, அதுபோல.

அதாவது மேற்கத்திய சமூகத்தில் பேசிய மைய-சிதைவு என்பது “authoritarian” என்ற கருத்துக்கு எதிராக. நான் அறிந்தவரை தமிழில் அதை “அறிவாளிப் போக்கு” என்று எடுத்துக்கொண்டனர். அதற்க்கு கரணம் நம்மிடம் இருந்த red-tapism மற்றும் சோசியலியச-ஜனநாயக அரசியல் சித்தாந்தம். பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சமே (நான் அதை குறை என்று சொல்லமாட்டேன்) “missing sincerity” .

நம் கலாச்சாரத்தில் இந்த “missing sincerity” வைத்து இயங்கமுடியுமா என்று சிந்தித்துப்பார்த்தால், ஒரு கலைப்படைப்பை நம்மால் கண்டிப்பாக படைக்க முடியாது. காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டது, பொருளாதார நிறைவு தேவையான ஒரு காலத்தில் “Aboslute sincerity” என்ற ஒன்று தேவையாகிறது.

சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் பற்றி மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது நான் சொன்னேன் தமிழக அரசியலையே புரட்டி போட்ட இரு பாடல்கள் என்றால்

1) புதிய வானம், புதிய பூமி

2) நான் ஆணையிட்டால்.

புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே , நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது, ஒரு தவறு செய்தால், அது தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.. ராமசந்திரன் மக்களை நோக்கி அறைகூவல் விட்டார். அந்த கூவலில் நேர்மை, உழைப்பு, அன்பு,காதல், கருணை, அறம், தாயை போற்றுதல், பெண்களை மதித்தல், அரசியல் தூய்மை என்ற ஒவ்வொரு அசைவிலும் அவரிடம் “sincerity” இருந்தது.

மேற்சொன்ன காரணிகள் எல்லாம் ஓரளவு “universal truth” என்று எடுத்துக்கொள்ளலாம். அவரும் ஒரு பின்நவீனத்துவதியாக இருந்தால் இந்த அளவு வெற்றிகிட்டியிருக்கமா? .நம் மரபில் பின்னவீனத்துவ இடம் என்ன என்பதை இதைவைத்தே புரிந்துகொள்ளளாம். அவரின் இந்த கலை வடிவம் தேசியகட்ச்சியை ஒன்றுமில்லாமல் செய்து திராவிட ஆட்சியை கொண்டுவர உதவியது.

பின்நவீனத்துவ பார்வை சற்று வித்யாசமானது.இப்படி சுருக்கமாக தொகுக்கலாம். 1. மகத்தான கதைகளின் நிராகரிப்பு 2.கலாச்சார சார்பியல்வாதம், 3.மொழி யதார்த்தம் 4. பன்மைத்துவம் மற்றும் பன்முகத்தன்மை 5. “ஓருண்மை” என்ற கோட்பாட்டிற்க்கான சந்தேகம்

அஜிதனின் உரையில் irony of post-modernism பற்றி தான் தொடங்குகிறார். philsophy now பத்திரிகையில் 2016 இல் ஒரு நீண்ட கட்டுரை வந்தது “death of post-modernism”, அதையொட்டி இந்த தத்துவத்தில் என்ன சிக்கல் இருக்கிறது என்று தொடர்ந்து ஆராய்ந்தார்கள். முக்கியமான கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

1 கலாச்சார வடிவங்களின் அசல் தன்மையையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு முரண்பாடான உணர்வுடன் பின்நவீனத்துவம் அடிக்கடி செயல்படுகிறது

2 பெரும் கதைகள் மற்றும் உலகளாவிய உண்மைகளை பின்நவீனத்துவம் நிராகரிப்பது ஒரு முரண்பாடான நிலைப்பாடாகும். மொத்தக் கோட்பாடுகளை விமர்சிக்கும் போது, பின்நவீனத்துவம் அதன் சொந்த கதையை முன்வைக்கிறது, அது எந்தவொரு புறநிலை, மேலோட்டமான உண்மையின் சாத்தியக்கூறுகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

3 பின்நவீனத்துவ படைப்புகள் பெரும்பாலும் விளையாட்டுத்தனத்தையும் தெளிவின்மையையும் வெளிப்படுத்துகின்றன.

4 நூல்கள் மற்றும் கலாச்சார நெறிமுறைகளை மறுகட்டமைக்கும் பின்நவீனத்துவத்தின் போக்கு ஒரு முரண்பாடான அணுகுமுறையால் குறிக்கப்படுகிறது. மொழி மற்றும் விளக்கத்திலிருந்து தப்பிக்க இயலாமையை அங்கீகரிக்கும் அதே வேளையில் சிதைக்கும் செயலில் முரண்பாடு உள்ளது.

5.கலாச்சாரத்தையும் கலையின் பண்டமாக்கலையும் விமர்சிக்கின்றது. வணிகவாதம், விளம்பரம் மற்றும் பிரபலமான கலாச்சாரம் ஆகியவற்றுடன் ஈடுபடும் படைப்புகளில் முரண்பாடு தெளிவாகத் தெரிகிறது, அதே நேரத்தில் இந்த கூறுகள் அடையாளத்தையும் சமூகத்தையும் வடிவமைக்கும் வழிகளைப் பற்றி கருத்து தெரிவிக்கின்றன.

6 பின்நவீனத்துவப் படைப்புகள் பாரம்பரிய கட்டமைப்புகளை உடைத்து, துண்டு துண்டாக சிதைவதைத் தழுவுகின்றன. இந்த முரண்பாடான அணுகுமுறை வழக்கமான கதைகள் மற்றும் கலாச்சார வடிவங்களின் ஒத்திசைவை சவால் செய்கிறது.

7 கலாச்சார சார்பியல்வாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், முழுமையான உண்மைகளை நிராகரிப்பதும் முரண்பாடாகவே பார்க்கப்படுகிறது.

பின்நவீனத்துவம் உண்மையைப் பற்றிய அதன் சொந்த கண்ணோட்டத்தை முன்வைக்கிறது, அதே நேரத்தில் உலகளாவிய செல்லுபடியாகும் கண்ணோட்டத்தின் சாத்தியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. அதற்க்கு மாற்று trans-modernism தானா? அஜிதன் இதற்கான விடையாக trans-modernism த்தை முன்வைக்கிறார். சுருக்கமாக trans-modernism சொல்வது என்ன (நன்றி விக்கிப்பீடியா)

டிரான்ஸ்மாடர்னிசத்தில், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் ஆகிய இரண்டிற்கும் ஒரு இடம் உள்ளது, மேலும் அது பாரம்பரியத்தை அழிப்பது அல்லது மாற்றுவதை விட பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் நவீனமயமாக்கவும் ஒரு இயக்கமாக முயல்கிறது. நவீனத்துவம் அல்லது பின்நவீனத்துவம் போலல்லாமல், பழங்கால மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளின் மரியாதை மற்றும் மரியாதையானது டிரான்ஸ்மாடர்னிசத்தில் முக்கியமானது.

டிரான்ஸ்மாடர்னிசம் அவநம்பிக்கை, சார்பியல்வாதம் மற்றும் எதிர் அறிவொளி ஆகியவற்றை விமர்சிக்கிறது. இது ஒரு வரையறுக்கப்பட்ட அளவிற்கு, நம்பிக்கை, முழுமையானவாதம், அடித்தளவாதம் மற்றும் உலகளாவியவாதம் ஆகியவற்றைத் தழுவுகிறது. இது ஒரு ஒத்த சிந்தனை முறையைக் கொண்டுள்ளது, விஷயங்களை உள்ளே இருந்து பார்க்காமல் வெளியில் இருந்து பார்க்கிறது.

உரையை முடிக்கும் போது காலத்தை நோக்கி பேசும் படைப்புகள் என்றும் நிலைக்கும் என்றார். அது உண்மை தான், அதனால் தான் டால்ஸ்டாய் இன்றும் வாசிக்கப்படுகிறார். இப்படி எடுத்துக்கொள்ளலாம். என்னுடைய நிலை என்ன: ஒரு நீண்ட கோடு வரையுங்கள், ஒவ்வொரு அலையும் ஒவ்வொரு புள்ளியில் நாம் பொருத்தலாம். ஆனால் காலத்தின் “value” நோக்கி பேசிய படைப்புகள், அந்த புள்ளியை தாண்டி மீண்டும் மீண்டும் கோட்டில் முன்னகர்ந்து கொண்டே செல்லும்.

நான் பின்நவீனத்துவதை நிராகரிக்கவில்லை, அதுவும் எனக்கு தேவை. அது நூற்றாண்டு முழுவதும் அரங்கேறிய அலை. அதன் வீழ்ச்சியும் முக்கியம். தொடர்ந்து இதை பற்றி படித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும். இப்பொது அல்-கிஸா நாவலில் இந்த பகுதியை மீண்டும் நினைவுகூருகிறேன். இங்கிருந்து அவரின் படைப்பை அறிந்துகொள்ளலாம். ஆபரணம் என்ற பகுதியில் வரும் பெரும்காதலும், கருணையும்.

“சகோதரர்களே, இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளமும் அவன் கருணையாலேயே சுழல்கிறது, ஒவ்வொரு இலையும் அவன் பேரருளாலேயே துளிர்க்கிறது, அவன் பேரறத்தின்பாலே உதிர்கிறது, ஒவ்வொன்றிற்கும் அவனிடம் கணக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆம், அவன் பெரும் காதலாலேயே இவை எல்லாம் இயங்குகின்றன. அல்ஹம்துலில்லா. “

விவேக் ராலே

முந்தைய கட்டுரைஆன்லைனும் குருகுலமும்
அடுத்த கட்டுரையானம், கடிதங்கள்