வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள நண்பர்களுக்கு

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தின் மறுஆக்கமான வெண்முரசு வெளிவந்த நாள் முதல் அதன் அனைத்துத் தொகுதிகளும் வாங்கக் கிடைக்குமா என்னும் கோரிக்கை இருந்துகொண்டிருக்கிறது. வெண்முரசு கடந்த பத்தாண்டுகளாகவே அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது, ஆனால் முழுத்தொகுதிகளும் உடனே கிடைக்கும் நிலை உருவானதே இல்லை. காரணம் இந்நூல் பெரியது என்பதனால் அச்சிட்டு தயாரிப்பது பெரும்பணி. கிட்டங்கியில் சேமிக்கவும் நிறைய இடம் தேவை. ஆகவே ஓரிரு நூல்கள் விற்பனைக்கு வரும்போது ஏற்கனவே வெளிவந்தவை விற்கப்பட்டு முடிந்திருக்கும்.

முதல்முறையாக இப்போது வெண்முரசின் எல்லா தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக வெளியிடும் பெருந்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளோம். வெண்முரசு மொத்தம் 26 பாகங்கள் கொண்டது. ஓவியர் ஷண்முகவேல் வரைந்த 500க்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களும்  ஏறத்தாழ 21000 பக்கங்களும் கொண்ட இந்நீண்ட நாவல் தொகுப்பு செம்பதிப்பாக விஷ்ணுபுரம் வெளியீடாக இந்த ஆண்டு ஜுலை மாதத்தில் வெளிவரவுள்ளது.

தனித்தனி புத்தகங்களாக அச்சிடுவதில் ஏற்படும் விலை உயர்வை இந்த மொத்தப்பதிப்பில் தவிர்க்க முடியும் என நம்புகிறோம். நூல்களை மொத்தமாக தங்கள் நூலகத்திற்காக வாங்குபவர்கள், அன்பளிப்பாக பிறருக்கு அளிக்க விரும்புபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

வெளிவரவிருக்கும் வெண்முரசு முழுத்தொகுப்பின் விலை ரூ.38000/-. முழுத்தொகுப்பு வேண்டுவோர் ரூ.15000/- கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜுன் மாதம் 15ம் தேதிக்குள் முழுத்தொகையும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். முழுத்தொகையும் செலுத்திய பிறகே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்திற்குள் மட்டும் தபால் செலவு இல்லை. பிற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தபால் செலவு தனி. வெளிநாடுகளில் இருந்து வாங்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் அல்லது வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நூலகங்களுக்கு அல்லது முதியோர் இல்லங்களுக்கு நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் அளிக்கலாம். அவர்களின் பெயர் நூலில் எழுதப்பட்டு ஆசிரியர் கையெழுத்துடன் அளிக்கப்படும்.

நூல்களில் ஆசிரியர் கையெழுத்து  வேண்டுவோர்  பெயர் குறிப்பிடவும்.

மூத்தவர்களுக்கு பரிசாக அளிக்க விரும்புபவர்கள் அதை குறிப்பிட்டால் பரிசுப்பொட்டலமாக உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தங்களிடமிருப்பதில் விடுபட்ட நூல்களை முன்பதிவு செய்து பெற விரும்புபவர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தனியாக எழுதலாம்.

புத்தங்கள் அனைத்தும் ஜுலை முதல் வாரத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 15, 2024

முன்பதிவு விவரங்கள்: 

முழுத்தொகுப்புக்கான மொத்தத்தொகையும் முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு அதன் ஸ்க்ரீன்ஷாட் அல்லது Ref No, தங்கள் முகவரி மற்றும் கையொப்பம் பெற வேண்டிய பெயர் விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவேண்டும். பணம் பெற்றுக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் தங்களது பதிவு எண் கொடுக்கப்படும்.

***

ரூ 15000 செலுத்தி முன்பதிவு செய்ய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியபின் அதன் விவரம்  (Reference No, Screenshot) பணம் செலுத்தியவர் பெயர், முகவரி, வாட்ஸப் எண் ஆகிய தகவல்களுடன் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பணம் பெற்றுக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் பதிவு செய்து கொண்டதற்கான பதிவு எண் அனுப்பி வைக்கப்படும்.

Curr Acc Name: VISHNUPURAM PUBLICATIONS

Curr Acc No: 214205001589

Bank: ICICI Bank Ltd

IFSC: ICIC0002142

Branch: Vadavalli, Coimbatore, Tamilnadu

Ph: 9080283887

***
B No Book Name MRP Net
1 முதற்கனல் 1500 1350
2 மழைப்பாடல் 2500 2250
3 வண்ணக்கடல் 2000 1800
4 நீலம் 1100 990
5 பிரயாகை 2600 2340
Round off -30
மொத்தம் 9700 8700

 

***

B No Book Name MRP Net
6 வெண்முகில் நகரம் 1800 1620
7 இந்திரநீலம் 1700 1530
8 காண்டீபம் 1400 1260
9 வெய்யோன் 1700 1530
10 பன்னிரு படைக்களம் 2000 1800
Round off -40
மொத்தம் 8600 7700

 

***

 

B No Book Name MRP Net
11 சொல்வளர்காடு 1900 1710
12 கிராதம் 2200 1980
13 மாமலர் 1700 1530
14 நீர்க்கோலம் 2000 1800
15 எழுதழல் 1700 1530
Round off -50
மொத்தம் 9500 8500

 

***

B No Book Name MRP Net
16 குருதிச்சாரல் 1600 1440
17 இமைக்கணம் 1000 900
18 செந்நா வேங்கை 1700 1530
19 திசைதேர்வெள்ளம் 1700 1530
20 கார்கடல் 1800 1620
Round off -20
மொத்தம் 7800 6300

 

***

B No Book Name MRP Net
21 இருட்கனி 1300 1170
22 தீயின் எடை 1100 990
23 நீர்ச்சுடர் 1200 1080
24 களிற்றுயானைநிரை 1500 1350
25 கல்பொருசிறுநுரை 1500 1350
26 முதலாவிண் 400 360
மொத்தம் 7000 6300

 

***

மேலும் விவரங்கள் அறிய 9080283887 என்ற (வாட்ஸப்) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

நன்றி

மீனாம்பிகை

விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைதொடக்கத்தின் விசையில்..
அடுத்த கட்டுரைகாலமும் இருத்தலும்- கடிதம்