பனிமனிதன் வாசிப்பு

பனிமனிதன் புதிய பதிப்பு  வாங்க 

பனிமனிதன் மின்னூல் வாங்க

இந்தப் புத்தகத்தில் இயற்கை இயற்கையாகவே உள்ளது.சிறிது கூட செயற்கை கலக்கப்படவில்லை.

இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது ஒரு Adventure சுற்றுலா சென்று வந்த அனுபவம் கிடைத்தது.

புத்தகத்தில் ஒவ்வொரு பகுதியையும் படிக்கும் போது மனதிற்குள் அனைத்தும் உயிரோட்டமாக ஒரு சினிமா போல ஓடிக் கொண்டே இருந்தது.

இப்புத்தகத்தில் வரும் பரிணாம வளர்ச்சிக்கு முந்தைய விலங்குகளின் உடலமைப்பு நம்மை திகைப்புக்குள்ளாக்கியது.

இடையிடையே இமயமலை உருவான விதம்,மனிதனின் பரிணாம வளர்ச்சி, அடிமனம், ஆழ்மனம் போன்றவற்றின் ஏராளமான அறிவியல் விளக்கங்கள் சிறுவயதில் பாடம் படிக்கும்போது தமிழில் சொற்பொருள் விளக்கம் என்ற பகுதியை படித்தது போல இருந்தது.

கதை நகரத் தொடங்கியதும் பாண்டியனைப் போலவே எனக்கும் எப்படா பனிமனிதனை பார்ப்போம்? என்ற ஆவல் தொற்றிக்கொண்டே வந்தது. இடையில் டாக்டர் கூறும் அறிவியல் விளக்கங்கள் எவராலும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவே இருந்தது.

நமக்கு இயல்பாகவேசே! குழந்தையாகவே இருந்திருக்கலாம்! நாங்கள் எல்லாம் சின்ன வயசுல அதை சாப்பிடுவோம், அந்த ருசி இப்ப வராது என்ற பல சிறு வயது ஞாபகங்கள் இருக்கும்.

இந்தக்கதை அதற்கும் மேலாக நம் பிறப்பிற்கு முன்னே இப்படித் தான் இருந்தோம் என்பதை விளக்கிக் காட்டியது. மனித இனமும் பனிமனிதன் போலவே வெள்ளந்தியாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றிற்று.

*தனக்கென்று ஒரு பழத்தை கூட அதிகமாக எடுத்துக் கொள்ளாத பெருந்தன்மை

*நான் என்ற உணர்வே இல்லாதது

* சந்தோஷத்திற்கான உண்மையான எடுத்துக்காட்டு

* அனைவர் மனமும் ஒன்றி இருத்தல்

போன்ற அனைத்தும் இன்றைய நவீன உலகில் சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்காது.

இயற்கையையும், அறிவியலையும் ஒருசேர இப்புத்தகத்தில் கையாண்டு இருக்கிறார் ஆசிரியர்.

உண்மையில் குழந்தைகள் அனைவருக்கும் வாசிக்க தர வேண்டிய புத்தகம்.

நன்றி

முத்துக்குமார்

முந்தைய கட்டுரைமரங்களும் மனிதர்களும்- கடிதம்
அடுத்த கட்டுரைஎம்.ஆர்.எம். அப்துற் றஹீம்