சாரு நிவேதிதாவால் தனக்குப்பின் பிறழ்வெழுத்து முறையில் சிறப்பாக எழுதுபவராக அராத்து அடையாளம் காட்டப்பட்டவர். நவீனத் தமிழிலக்கியத்திற்கு புதிய களமான சமகால உயர்வர்க்க வாழ்க்கைச்சூழலையும், அவர்களின் கேளிக்கையுலகையும், புதியவகையான உறவுச்சிக்கல்களையும் கேலி கலந்த மொழியில் எழுதுகிறார்