விக்ரமன் பொதுவாசகர்களுக்கான சரித்திரப்புனைவுகளை எழுதியவர். அவை கல்கியை அடியொற்றி மேலும் எளிமையான நேரடியான நடையில் சாகசத்தன்மையும் கற்பனாவாதமும் குறைவான எளிய கதைத்தருணங்களை அளிப்பவை.விக்ரமன் நடத்திய அமுதசுரபி இதழ் சிறிய அளவிலான பொதுவாசிப்புக்குரிய இதழாக நடைபெற்றது.